ADVERTISEMENT
அம்பத்துார், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்காக, 'ஹிந்து தர்மார்த்த சமிதி' சார்பில், 19வது ஆண்டு திருக்குடை உற்சவ ஊர்வலம் நடந்தது.
சென்னை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, 16ம் தேதி துவங்கிய, திருக்குடை ஊர்வலம், நேற்று முன் தினம் வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலுக்கு சென்றது.
நேற்று மாலை, அங்கிருந்து புறப்பட்டு, பாடி, முகப்பேர், அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக திருமுல்லைவாயலை சென்றடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள், 11 திருக்குடை மற்றும் பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முன்னதாக, முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஹிந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி கலந்து கொண்டார். அவரை, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது செயலர் பி.வி.தமிழ்செல்வன், எம்.ஸ்ரீபதி ஆகியோர் வரவேற்றனர்.
திருக்குடை ஊர்வலம், இன்று காலை சிறப்பு பூஜைக்கு பிறகு, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக, திருவள்ளூருக்கு சென்று தங்கும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!