ADVERTISEMENT
அரும்பாக்கம், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண், உறவினர் திருமணத்திற்காக, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் தங்கிருந்தார்.
அவர், நேற்று முன்தினம் மண்டபத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக, இருவர் மொபைல் போனில் 'வீடியோ' எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பெண் சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள், இருவரை மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டையை சேர்ந்த, பச்சையப்பன், 20, மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் மண்டபத்தில் சமையல் வேலைக்கு உதவியாளராக இருந்து வந்தது தெரிந்தது.
இருவரும், மொபைல் போனில் பெண்கள் குளிப்பதை 'வீடியோ'வாக எடுத்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, இவர்களிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, பச்சையப்பனை சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!