Load Image
Advertisement

மட்டன் பிரியாணியில் பல்லி ரூ.50,000 இழப்பீடு



சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:

புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள 'டெக்கான்' ஹோட்டலுக்கு, 2022 பிப்., 11ல் நண்பருடன் உணவருந்த சென்றேன். மட்டன், காடை பிரியாணி ஆர்டர் செய்தேன். அரை 'பிளேட்' மட்டன் பிரியாணியை சாப்பிட்ட பின், பிரியாணி மசாலாவுக்குள் நான்கு அங்குல அளவு பல்லி இருந்தது.

சிறிது நேரத்தில், குமட்டல், வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதலுதவி பெற்று வீடு திரும்பினேன்.

வீடு சென்ற பின், கடும் வயிற்று வலி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. பிப்., 12ல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்தேன்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளித்தேன். பாதுகாப்பற்ற உணவை வழங்கிய ஹோட்டல் நிர்வாகம், இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் வினோபா, உறுப்பினர் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற மட்டன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது என்பது, ஆய்வு அறிக்கை வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உணவு பாதுகாப்பு துறை, ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டு உள்ளது.

எந்தவொரு உணவு பொருளில், பல்லி விழுந்தாலும் அது விஷமாக மாறி, அந்த உணவை உண்பவரின் உடல் நலத்தைப் பாதிக்கும்; உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே, பாதுகாப்பற்ற உணவை வழங்கி, சேவை குறைபாடுடன் நடந்த உணவக நிர்வாகம் இழப்பீடாக 50,000 ரூபாயும், மருத்துவ செலவாக 5,000 ரூபாயும், இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (4)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பல்லி பிரியாணி செய்து விற்ற குற்றத்துக்கு நாலு வருடம் சிறை கூட குறைந்த அளவே. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்லி பிரியாணி தயாரிக்க எப்படி அனுமதித்தார்கள் என்பதை பொது மக்களுக்கு புரியும் விதத்தில் விளக்க வேண்டும்.

    • angbu ganesh - chennai,இந்தியா

      rom

    • angbu ganesh - chennai,இந்தியா

      ரொம்ப எடத்துல தரமற்ற உணவுதான் கொடுக்கறாங்க, ரோட்டல பாதிப்பற்ற முறையில் என்னை கடாய் வச்சு சிக்கன் வரக்காரனுங்க என்னை மேல therikadannu கேட்டா நீங்க பாத்து போங்கங்நிறானுங்க வடக்கன்ஸ் தான் இதுல ரொம்ப பேர் இருக்கானுங்க

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Many Hotels in India are not Kept Clean and Hygienic including many Vegetarian Hotels, Non veg Hotels Cleanliness is definitely a Very Very Big Question Mark.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement