Load Image
Advertisement

விபத்தில் தம்பதி பலி; நான்கு பேர் படுகாயம்

 Couple killed in accident; Four people were injured    விபத்தில் தம்பதி பலி; நான்கு பேர் படுகாயம்
ADVERTISEMENT
திருப்பூர் : ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த மாநகராட்சி, 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முருகேசனின் மூத்த மகன் மதன்குமார், 36; தனியார் கல்லுாரி பேராசிரியர்.

இவரது மனைவி ரம்யா, 32. தம்பதிக்கு தர்ஷன், 7 மற்றும் ஒன்றரை வயதில் அகிலன் என, இரு குழந்தைகள் உள்ளனர். மதன்குமார் மாமனார் பரமசிவம், 64, மாமியார் ராஜாமணி, 51.

நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், மதன்குமார் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பழனி கோவிலுக்கு காரில் சென்றனர். தரிசனம் முடிந்து, தாராபுரம், காங்கேயம் வழியாக ஈரோடு திரும்பினார்.

வட்டமலை அருகே வந்த போது, டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார், பலமுறை குட்டிக்கரணம் போட்டு சாலையில் கவிழ்ந்தது.

இதில், மதன்குமார், ரம்யா பரிதாபமாக இறந்தனர். இரு மகன்கள் உட்பட நான்கு பேரும் படுகாயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement