ADVERTISEMENT
மேட்டூர் : தமிழகம் முழுதும், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், சிலை விசர்ஜனமும் நேற்று முதல் துவங்கியது.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதிகளான மேட்டூர் பழைய காவிரி பாலம், எம்.ஜி.ஆர்., பாலம், பூலாம்பட்டி ரோடு, சங்கிலி முனியப்பன் கோவில் அருகே சிலைகளை கரைக்க, மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், வாகனங்களில் சிலைகளை கொண்டு வந்தனர்.
மேட்டூர் டி.எஸ்,பி., மரியமுத்து தலைமையில், கருமலைக்கூடல், கொளத்துார், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முதல் நாளான நேற்று, 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தவிர, மேட்டூர் தீயணைப்பு நிலைய 15 வீரர்கள், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!