செப்., 17ல் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா தோற்கடித்து கோப்பையை வென்றது.
வெற்றியை ராமேஸ்வரம் மீனவர்கள் கொண்டாடினாலும் மகிழ்ச்சியுடன் நேற்று மீன்பிடிக்க செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. 2011ல் நட்நத உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை தோற்கடித்து இந்தியா வென்றது. அன்று இரவு நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிச்சாமி, மாரிமுத்து ஆகிய 4 பேரை இலங்கை கடற்படைவெட்டி கொலை செய்து கடலில் வீசினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில்: 2011ல் இதே போல் வெற்றிக்குப்பின் நடந்த கொலை சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது. அந்த அச்சத்தில் நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சிறியரக படகுகள் மட்டுமே சென்றன், என்றார்.
வாசகர் கருத்து (3)
கட்சத் தீவை மீட்பதுதான் நிரந்தரத் தீர்வு. மத்திய அரசு இதைச் செய்வார்களா என்பதுதான் இன்றைய கேள்விக் குறி அதை ஏன் கொடுத்தார்களென்று அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். தமிழகம் வந்த அத்தனை மத்திய அமைச்சர்களும் தீவைக் கொடுத்த விவகாரத்தில் நல்லலுறவின் அடிப் படையில் கொடுத்ததாக அடிக்கடி சொன்னார்கள். இது நம்பக் கூடியதாக யில்லை. தீவை கொடுப்பதற்கு முன் நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டும். பெற்றப் பின்பு அதிபரின் கவனத்திற்குச் சென்று அவரின் ஒப்புதலும் பெற வேண்டும். இது நாடு சம்பத்தப் பட்ட விவகாரம்.எல்லாமே வெளிப்படையாக நடக்க வேண்டும் நடந்ததா? தீவோடு சுற்றியுள்ள கடற்ப் பகுதியையும் சேர்த்து வழங்க வேண்டும். இதில் நிறைய பாதிக்கப் பட்டவர்கள் தமிழக மீனவர்கள். நிறைய மீனவர்கள் சுடப்பட்டுள்ளார்கள். பல மீனவர்களும் மரணமடைந்துள்ளார் கள். இதில் தமிழர்களின் தன்மானமும் அடங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள பாஜக இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப் பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கின்ற ஊழலை மட்டும் குறியாக வைத்து மக்களிடம் காட்டி மாநில ஆட்சியைப் பிடிப்பதில்லே மட்டும்தான் அவர்கள் குறியாகவுள்ளனர். தமிழகத்திலுள்ள இரண்டு திராவிடக் கட்சிகளும் ஏன் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர்
கட்சத் தீவை மீட்காதவரைக்கும் மீனவர் பிரச்சனைக்கு என்றைக்கும் தீர்வில்லை. எந்த நாடும் எந்தக் காலத்திலும் செய்யாத வொன்றை அன்று காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு ஏதோ மறைக்கப் பட்ட காரணங்களால் செய்துவிட்டார்கள்.நல்லுறவின் அடிப்படையில் கொடுத்த தாகத்தான் அன்று தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர்கள் சொன்னார்கள். நம்பக் கூடிய கதையாக தெரியவில்லை. அப்படியென்றால் தமிழக மீனவர்களை பலரை ஏன் இலங்கை கடற்ப் ஏன் சுட வேண்டும். பலர் சுட்டுக் கொள்ளப் பட்டார்கள். அன்று உரத்த குரலில் பேசிய திராவிட கட்சிகள் இன்று வாய்மூடிக் கொண்டு ஏன் சும்மா இருக்கின்றார்கள். நாளைய இந்திய நாட்டின் பாதுகாப்பை யும் கருதி இந்த தீவு மீட்கப் படவேண்டும். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக வின் நிலைப் பாடு என்னவென்று சொல்வார்களா? நல்லுறவின் அடிப்படையில் தீவைக் கொடுத்திருந்தால் அதை வெளிப் படையாக செய்திருக்கலாமே
கச்சதீவு திமுக/காங்கிரசு ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு தாரைவார்த்து விட்டார்கள், இனி யாராலும் மீட்கமுடியாது அது முடிந்த கதை, சதம் கதம், யாராவது மீட்பதாகக் கூறினால் அது அரசியலுக்காகச் செய்யும் ஏமாற்று வேலை.