Load Image
Advertisement

பாலக்காட்டில் உலகளாவிய பிராமண சங்கமம்

 Universal Brahmin Sangam at Palakkad    பாலக்காட்டில் உலகளாவிய பிராமண சங்கமம்
ADVERTISEMENT
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காட்டில், பிராமண சபை தலைமையில், உலகளாவிய பிராமண சங்கமத்தை, வரும், 22ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகி கவுரிசங்கர் துவக்கி வைக்கிறார்.

கேரள பிராமண சபை தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகிக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கல்யாண் சில்க்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட்டாபிராமன் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, நவீன காலத்தில் வேத அறிவின் முக்கியத்துவம் குறித்து விவாதமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து இரு நாட்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் விவாதம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. தொடர்ந்து சந்திப்பின் கருத்துரை நிகழ்ச்சி நடக்கும்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 3,000 பேர் பங்கேற்கும் இந்த சங்கமம் 24ம் தேதி நிறைவு பெறுகிறது.


வாசகர் கருத்து (4)

  • vbs manian - hyderabad,இந்தியா

    பிராமின் அடையாளம் அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. சமுதாய வளர்ச்சியில் அவர்கள் பங்கு புறம் தள்ளப்படுகிறது. இந்தமாநாட்டில் சரியான விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  • r ravichandran - chennai,இந்தியா

    எஸ்வி சேகர் அழைக்கப் படவில்லையா, பிராமணர் கட்சி ஒன்றை தொடங்க போவதாக கூறி இருந்தாரே..

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பிராமண சங்கமம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • Ambika. K - bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள். இதே போன்ற நிகழ்ச்சிகள் பிற மாநிலங்களிலும் நடத்த பட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement