Load Image
Advertisement

ரூ.2 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவில்

Vinayagar Chaturthi 2023: Ganesha temple decorated with notes worth Rs.2 crore    ரூ.2 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவில்
ADVERTISEMENT
பெங்களூரு:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விநாயகர் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கர்நாடக தலைநகர் பெங்களூரின் ஜே.பி.நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி கோவில் முழுதும், 10 - 20 - 50 - 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.மேலும், நாணயங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 2.18 கோடி ரூபாய்; நாணயங்களின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, தனித்துவமான பாணியில் அலங்காரம் செய்து வரும் ஸ்ரீ சத்ய கணபதி கோவில் நிர்வாகம், இந்த முறை ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி உள்ளது.

இது குறித்து, கோவில் அறங்காவலர் மோகன் ராஜு கூறுகையில், ''கோவில் முழுதும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்ய மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. பண்டிகை முடிந்தவுடன், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து (3)

  • J.Isaac - bangalore,இந்தியா

    கொழுப்பு,மனசார பிச்சை போடமாட்டாங்க.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    விநாயகர் இதை எல்லாம் செய் என்று கூறவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. இதில் பக்தி எங்கிருந்து வரும். வெறும் publicity -க்காக இப்படி செய்வது சரியல்ல. அப்புறம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வருமானவரித்துரையும், அமலாக்கத்துறையும் வரும். வந்த பிறகு, மோடிஜியை குறை கூறுவீர்கள். இதெல்லாம் தேவைதானா...?

  • அப்புசாமி -

    பணக்கார புள்ளையார்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement