Load Image
Advertisement

ஆன்லைன் விற்பனையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம்

 Super Saravana Stores Group in online sales     ஆன்லைன் விற்பனையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம்
ADVERTISEMENT
சென்னை : சில்லறை வர்த்தகத்தில், 50 ஆண்டுகளை கடந்துள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம், சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் என்ற பெயரில், ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை, விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று துவக்கியது.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் ஆழமாக அறிந்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் சாதனை படைத்து வருகிறது.

சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், மதுரை மாட்டுத்தாவணி என, ஐந்து இடங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் என்ற, ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை இக்குழுமம் துவக்கி உள்ளது.

அதற்கான லோகோவை, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ராஜரத்தினம் வெளியிட, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழும நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

புதிய ஆன்லைன் நிறுவனத்தின் வாயிலாக ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமயலறை சாதனங்கள், ஆபரணங்கள், அழகு சாதனம், விளையாட்டு, குழந்தை பராமரிப்பு மற்றும் பயண ஏற்பாட்டுக்கான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம் என, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (3)

  • Raa - Chennai,இந்தியா

    ஆன்லைன் வர்த்தகத்தில் முதலில் user id பண்ண வற்புறுத்தக் கூடாது. வெப்சைட்டுக்கு வருவது பொருட்கள் வாங்க...user id பண்ண இல்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஷாப்பிங் முடித்தபின், user id பண்ண சொல்லலாம் அல்லது guest ஆகா checkout பண்ண சொல்லலாம்

  • SRINIVASAN V - MANDALAMANICKAM,இந்தியா

    ஆன்லைன் வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணாச்சி அவர்களே. 🙏🙏🙏

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    கடைசியாக அந்த URL போடவே இல்லையே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement