இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நிலாவில் 'சந்திராயன் - 3' விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைத்து மகளிருக்கு முக்கிய இடம் கொடுத்தார் பிரதமர். சமீபத்தில் ரயில்வே போர்டின் சேர்மனாக ஜெயா வர்மா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரயில்வேயின் இத்தனை வருட சரித்திரத்தில், ஒரு பெண் இந்த பதவியில் இருந்தது கிடையாதாம். அதோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சமீபத்தில் குறைத்து நாட்டிலுள்ள பெண்களின் சுமையை குறைத்துள்ளார் மோடி.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவுக்கு காங். வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக காங். கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், மசோதா கொண்டுவரப்போவதை எதிர்பார்ப்பதாகவும், இது காங். கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் மகள் கவிதா கூறுகையில், மத்திய அரசின் முடிவுக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதுடன் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மெகா பேரணிக்கு ஏற்பாடு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ. சார்பில் டில்லி அல்லது ராஜஸ்தானில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததை வரவேற்று 'மெகா' பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
வாசகர் கருத்து (4)
ஆமாம்-ஒரே குடும்பம் சார்ந்தவர்கள் தொடர்ந்து இருமுறைக்கு மேல் எம் பி எல் ஏ ஏன் பாஞ்சாயத்து பிரசிடன்ட் கவுன்சிலர் வார்டு மெம்பர் கூட ஆக முடியாதபனி தேர்தல் விதி முறையைக் கொண்டு வந்தால்.நல்லது.
என்ன ரமேஷ் ....தூக்கத்தில் இருக்கிறீர்களா ....எப்போது மோடி ஒழிக என்று தானே கூறுவீர்கள் ??? எதற்கும் இத்தாலி அம்மையார் மற்றும் இளவரசர் கருத்து கேட்டு ...பிறகு பாராட்டலாம்.....இல்லையென்றால் ...உங்கள் பதவி போய் விடும்.
ஜனநாயக விரோத ஆணி. தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்குவதற்கு பதில், ஒவ்வொரு கட்சியும் தான் போட்டியிடும் தொகுதிகளில் மூன்றில் ஒன்றைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.
பெண்களுக்கு 33 % ஒதுக்கினால் அதற்குள் OBC SC ST மைனாரிட்டி சமூகம் என்று புது கரடி விடுவார்களே ..