Load Image
Advertisement

தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதாவை நிறுத்தி வைக்கிறது மத்திய அரசு

Central government suspends the election commissioners appointment bill   தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதாவை நிறுத்தி வைக்கிறது மத்திய அரசு
ADVERTISEMENT
புதுடில்லி : கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடர் துவங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்களும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் இருந்து கேபினட் செயலர் அந்தஸ்துக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் மாற்றப்பட உள்ளனர்.

மேலும், இவர்களை தேர்வு செய்வதற்கான குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தற்போது இடம்பெற்றுள்ளனர்.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக, மத்திய அமைச்சர் ஒருவரை பிரதமர் பரிந்துரைக்கும் வகையிலும், மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போதைக்கு, இந்த மசோதாவை
நிறுத்தி வைக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த, அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, கொடுக்கப்பட்ட, எட்டு மசோதாக்கள் பட்டியலில், இந்த மசோதா இடம்பெறவில்லை.


வாசகர் கருத்து (4)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    மிகவும் அவசியமான ஜனநாயகமான மசோதா. சுப்ரிம் கோர்ட் அடிக்கடி நிர்வாகங்களில் தலையிடுவது, தடைபோடுவது, ஓடும் வாகனத்தின் வளர்ச்சி வேகத்தை குறைப்பது போன்றது. விரைவில் மத்திய அரசு இதை நிறைவேற்றும்.

  • Kannan - Bangalore,இந்தியா

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம அந்தஸ்து கொடுக்கப் பட்டதால் நிறைய பதவிகளுக்கு பல சலுகைகள் ஆடோமேடிக்காக கிடைக்கும் நிலை உள்ளது. உதாரணம்: ஸம்ப்சுவரி அலவன்ஸ் இதற்கு வருமான வரி விளக்குடன் இந்த அலவன்ஸ் மேல் அகவிலைப்படியை உண்டு. இது ஒரு வழியில் பின் வழியாக அதிக சலுகைகள் கெடுப்பதற்காக ஒப்பாகும். அத்தகைய பதவிகளையும் ஆராய்ந்து, அத்தகைய அதிகப்படி சலுகைகள் இந்த வகையில் இருக்கும் ஒவ்வொரு பதவிக்கும் தேவையா என்று அரசு ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்

  • venugopal s -

    மத்திய பாஜக அரசுக்கு இப்போதாவது கொஞ்சம் நல்ல புத்தி வந்ததே அதுவரை சந்தோஷம்!

    • pimpilakki pilappi -

      சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எதுக்கு? அப்போ நீதிபதி நியமனத்தில் அரசு தலையீடு-னு எதுக்கு ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement