Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

மழைக்காலத்தில் பாதுகாப்பு


மழைக்காலங்களில் இடி, மின்னலால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு இடிதாங்கியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்ளின். உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர் முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப் படுகிறது. அதுதான் இடிதாங்கி. அந்தக் கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு பூமியினுள் புதைக்கப்படும். இதற்கு எர்த்திங் என பெயர். இப்படிச் செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி, மின்னல் விழும்போது அதிலுள்ள மின்சாரம், இடிதாங்கி மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கட்டடம் பாதிப்பது தடுக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்



மூன்றாவது பெரியது



ஜனநாயக நாடுகளின் முதுகெலும்பாக விளங்குவது பார்லிமென்ட். ஏனெனில் இங்குதான் சட்டங்கள் நிறைவேற்றப்படும். சில நாடுகளில் கீழவை மட்டும், சில நாடுகளில் கீழவை, மேலவை என இரண்டும் இருக்கும். உலகளவில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய பார்லிமென்ட் சீனாவில் உள்ளது. அந்நாட்டு எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை 2977. இரண்டாவது இடத்தில் பிரிட்டன் பார்லிமென்ட் உள்ளது. 1427
எம்.பி.,க்கள் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு லோக்சபா 543, ராஜ்யசபாவில் 245 என மொத்தம் 788 எம்.பி.,க்கள் உள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement