Load Image
Advertisement

கை குழந்தையுடன் அலுவலக பணிகளை மேற்கொண்ட பெண் மேயர்

Woman mayor who carried out office duties with child in hand:   கை குழந்தையுடன் அலுவலக பணிகளை மேற்கொண்ட பெண் மேயர்
ADVERTISEMENT
திருவனந்தபுரம்: தனது கைக்குழந்தையுடன் அலுவலக பணி செய்யும் திருவனந்தபுரம் மாநகராட்சி பெண் மேயரின் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


கேரளாவில் இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி, அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, புதிய மேயராக ஆர்யா ராஜேந்திரனை, இடது ஜனநாயக முன்னணி மேயராக நியமித்தது. நாட்டிலேயே மிக குறைந்த வயதில் மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இவருக்கும் கேரளா சி.பி.ஐ. (எம்.) எம்.எல்.ஏ.வான சச்சின் தேவ் என்பவரும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இன்று அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அலுவலக பணிகளை கவனித்தும், கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பெண் மேயருக்கு பாராட்டும், வாழ்த்தும், தெரிவித்தனர். சிலர் விமர்சனம் செய்து பதிவேற்றினர்.


வாசகர் கருத்து (7)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    எல்லையில்லா நாடகம். வேலைக்குச்செல்லும் தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்கும் கட்டமைப்பு இல்லை என்பது மனிதவளத்தை வீணடிக்கும் செயல்.

  • LAX - Trichy,இந்தியா

    நினைத்தேன்.. நிச்சயமாக இது தமிழகத்து நிகழ்வாக இருக்காதென்று..

  • Venkataraman - New Delhi,இந்தியா

    குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அலுவலக வேலைகளை செய்யக்கூடாது. அது தவறு. வேண்டுமானால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு உறவினரிடமோ அல்லது நல்ல பெண்ணிடமோ கொடுத்து வைக்கலாம்.

  • கண்ணன்,மேலூர் -

    இப்படி வேலைக்கு வருகிற எல்லா பெண்களும் அவர்களின் குழந்தைகளை ஆபீஸூக்கு தூக்கி வந்தால் என்னாகும் எனவே இதெல்லாம் தேவை இல்லாத விளம்பரத்திற்காக சீன் போடும் வேலை.

  • Balaji - Chennai,இந்தியா

    சேரி எல்லோரும் தங்கள் குழந்தைகளை அலுவலகத்திற்கு கூட்டி செல்ல அனுமதி உண்டா.. எதிர்க்கு இந்த தேவையில்லாத விளம்பரங்கள்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்