Load Image
Advertisement

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 Central Cabinet meeting convened   மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது.
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர், செப்., 18 முதல் 22ம் தேதி வரைநடைபெறும் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; இதில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், 1948ல் பார்லிமென்ட் அமைப்பு உருவாக்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி இந்த சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.இதன்படி பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் இன்று துவங்கியது.
நாளை (செப்-19) முதல், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் கூட்டத் தொடர் நடக்கும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நாளை துவங்க உள்ள புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை கொண்டு வருவது, நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்ததாகவும், மிகவும் எதிர்பாக்கப்பட்ட மசோதாவான பார்லி. சட்டசமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதா கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அமைச்சரவை முடிவுக்கு காங்., வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக காங். கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியது, நீண்ட நாள் கோரிக்கையான மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீ்டு மசோதாவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.

வரலாறு:



1) கடந்த 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்த போது, லோக்சபாவில் முதன்முதலாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.

2) மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி., ஒருவர், இந்த மசோதாவை அமைச்சரிடமிருந்து பிடுங்கி கிழித்துப் போட்டார். இதன் பின் பல முயற்சிகள் செய்தும் நிறைவேற்றப்படவில்லை.

3 கடந்த 2010ல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது. இதை, லோக்சபாவிலும் நிறைவேற்றியிருந்தால் சட்டமாகியிருக்கும்.



வாசகர் கருத்து (1)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    பெண்களின் ஒட்டு இனி மோடிக்கு தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement