Load Image
Advertisement

சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

Shiv Sena MLAs disqualification case: Supreme Court notice to Speaker   சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ADVERTISEMENT
புதுடில்லி : சிவசேனா கட்சியின் 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு கெடு விதித்துள்ளது..



மஹாராஷ்டிராவில் கடந்தாண்டு ஜூன் மாதம், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தலைமயிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமயிலும் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., கூட்டணியில் இணைந்தனர். இதை தொடர்ந்து, மஹாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

கட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா எனவும், அவருக்கு தான் கட்சி சின்னம் எனவும் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே ஆதரவு 14 எம்.எல்.ஏ.க்கள் என 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக விசாரித்து வரும் தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே 4 மாதகால அவகாசம் வழங்கப்பட்டும், மஹாராஷ்டிரா சபநாயகர் ராகுல் நர்வேகர் எந்த பதிலும் அளிக்கததால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக உத்தவ் ஆதரவு 14 எம்.எல்.ஏ.,க்கள் பதில் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (5)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    நீதியின் வரம்பு மீறிய செயல்

  • Dharmavaan - Chennai,இந்தியா

    sabaa naayakrukku utharavida kortukku athigaaram undaa

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஒரே பிரச்சினை, இதை தீர்க்க வேண்டும் என்றால், ஒரே தேர்தல் தான் வழி. ..

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    தலைமை நீதிபதி அனாவசியமாக செயல்படுகிறார்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கடந்தாண்டு ஜூன் மாதம் ஏட்பட்ட ஒரு நிகழ்வில் இப்பொழுது உச்சநீதிமன்றம் தலையிட்டு, அதுவும் உடனே எந்த முடிவும் எடுக்காமல், மேலும் ஒரு வாரம் நேரம் கொடுத்து பதில் எதிர் பார்க்கிறது. இப்படி நீதிமன்றங்கள் செயல்பட்டால், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் ஆயிரக்கணக்கில் சேராமல் பின்ன என்ன நடக்கும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்