திருநெல்வேலியில் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' மூலம் செய்த விநாயகர் சிலைகள் விற்பனையை தடுக்கக் கூடாது' என, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. இந்நிலையில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும், அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதனையேற்றுக் கொண்டு அவசர வழக்காக இன்று(செப்., 18) உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தாலும் அந்த விநாயகர் சிலை அனுமதிக்கப்படாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரித்த விநாயகர் சிலைகளை தயாரிக்க விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அவ்வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கான தடை தொடர்கிறது.
வாசகர் கருத்து (12)
எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் நேரடியாக தடை என்பது காமடி. விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக நடக்கிறது - கோர்ட்டும் தமிழக அரசும் சில நூறு ஆண்டுகளாகத்தான் இருக்கிறது.
பிளாஸ்டர் ஆப் பாரிசில் விநாயகர் சிலைகளை செய்யகூடாது என்று சிலை தயாரிப்பவர்களுக்கு முன்பாகவே சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லாததால் ஏராளமான சிலைகள் POP யில் செய்யப்பட்டு விட்டன. இப்போது திடீரென்று தடை செய்வதால் சிலை தயாரித்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். யார் இந்த இழப்பை ஈடு செய்வார்கள் ? இந்த சிலைகளை தண்ணீரில் கரைக்காமல் மண்ணில் புதைத்துவிட சொல்லலாம். மற்ற மாநிலங்கள் எதிலும் இவ்வாறு சிலைகள் தயாரிப்பது தடைசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பக்ரீத் அன்று டன் கணக்கில் மிருக கழிவு வீதியில் ஓடும். அது இந்த கோர்ட்டாருக்கு தெரியாது.
பக்ரீத் அன்று டன் கணக்கில் மிருக கழிவு வீதியில் ஓடும். அது இந்த கோர்ட்டாருக்கு தெரியாது.
ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை ஒரு ஆளும் தடை செய்ய மாட்டான்.