Load Image
Advertisement

ஊழல் அமைச்சர்களிடம் பணத்தை கைப்பற்றி மக்களுக்காக செலவிடுவோம்: கெஜ்ரிவால் பேச்சு

We will seize money from corrupt ministers and spend it on people: Kejriwal speech   ஊழல் அமைச்சர்களிடம் பணத்தை கைப்பற்றி மக்களுக்காக செலவிடுவோம்: கெஜ்ரிவால் பேச்சு
ADVERTISEMENT
ரேவா: 'மத்திய பிரதேசத்தில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், ஊழல் அமைச்சர்களை சிறையில் அடைப்போம், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்றி, ஒவ்வொரு பைசாவும் மக்களுக்காகவே செலவிடுவோம்' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.


மத்திய பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள ரேவா பகுதியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பணத்திற்கு பஞ்சமில்லை. மத்திய பிரதேச அரசு மக்களிடம் கொள்ளையடித்துள்ளது. டில்லியில் நாங்கள் (ஆம்ஆத்மி கட்சி) ஊழலை முடிவுக்கு கொண்டுவந்தோம்.


பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்ததும், முன்னாள் அமைச்சர் மீது ரெய்டு நடத்தினோம். மத்திய பிரதேசத்திலும் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஊழல் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தி சிறையில் அடைப்போம். அவர்கள் கொள்ளையடித்த ஏராளமான பணத்தை கைப்பற்றி மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச கல்வியை அளிப்போம். மத்திய பிரதேச அரசின் ஒவ்வொரு பைசாவும், மக்களுக்காகவே செலவிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (22)

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    அந்த நல்ல காரியத்தை தில்லியிலிருந்தே தொடங்கலாமே. சிறையிலிருக்கும் மனீஷ் சிசோடியா மதுபான ஊழலில் திரட்டிய பணத்தை வைத்தே ஆரம்பிக்கலாமே. எதுக்கு மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்வரை காத்திருக்க வேண்டும்?

  • எவர்கிங் -

    கோசாநரிவாலின் Ho-Partner மணீஷ் சிசோடியா கதி என்னவாகும்?!

  • nv -

    இவருடைய இரண்டு அமைச்சர்கள் சம்பாதித்த பணத்தை வைத்து இவர் சொல்வது இப்போது செய்து முடிக்கலாம்

  • HoneyBee - Chittoir,இந்தியா

    முதலில் உங்க துணை முதல்வர் கிட்ட இருந்து ஆரம்பிக்கலாமே...

  • Shankar - Hawally,குவைத்

    மொதல்ல உங்க துணை முதல்வர் ஆட்டயப்போட்டதை வாங்கி காட்டு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்