தெலுங்கானா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்., முன்னாள் தலைவர் சோனியா, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2,500 மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதியை நேற்று அறிவித்தார்.
தந்திரவேலை
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி குறித்து நிருபர்கள் கேள்விக்கு, கவிதா அளித்த பதில்: இது காங்கிரஸ் கட்சியின் தந்திர வேலை. தெலுங்கானா மக்களும், காங்கிரஸ் கட்சி தங்களின் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றாது என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் ஆந்திர மாநிலத்துடன் இணைவதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
பலே...பலே.. பா.ஜ வின் பி டீம் வேலையைத் துவங்கிடிச்சு.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது யார் பொறுப்பு? தேர்தல் கமிஷன் பொறுப்பேற்கவேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் தானாக செயல்பட்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்கவேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கும்போது அதனை எப்படி நிறைவேற்றுவது என்பதை விளக்கி உறுதிசெய்யவேண்டும்.
இலவசங்கள் குறித்து தேர்தல் கமிஷன் , மதிய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும். இல்லை என்றால் நாடு திவாலாகி விடும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எல்லாக்.கட்சிகளும் டுபாக்கூர் பார்ட்டிகள் தான் அம்மணி...
நீங்க எப்படி ??