புதுடில்லி: காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைபடி, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி நீர் மேலான்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட நிலையிலும், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, இரண்டாவது கட்டமாக தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து முடிவெடுக்க, டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று(செப்., 18) நடந்தது.
கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.,க்கள் குழு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நாளை (செப்.,19) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளனர். இந்த நிலையில், கஜேந்திர சிங் உடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்வின்போது காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா, செயலாளர் ஷர்மா உள்ளிட்டோரும் இருந்துள்ளனர்.
வாசகர் கருத்து (7)
காவேரி மேலாண்மை வாரியம் ஒரு பல்லில்லாத வாரியம். வாரியத்தினுடைய ஆணையை மதிக்கப்படாவிட்டால் அதற்குண்டான தண்டனையை அது அளித்து அதை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரத்தையும் அதற்கு வழங்கப்படவேண்டும்.
மோடியால் தான் காவேரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கிறது. இல்லையெனில் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்.
உதவாக்கரையும் போய் சிவகுமார், சீத்தாராமையா காலில் விழுந்து தண்ணீர் பெற வேண்டும். இல்லாவிட்டால் புள்ளி வெச்ச கூட்டணியில் இருந்து வெளியேற தயாரா? திராணி இல்லாமல் பதவி ஒரு கேடா?
5000 கனஅடி அளவு தஞ்சாவூரை கூட எட்டாது. குறைந்தபட்சமாக 20000 கனஅடி திறந்தால் மட்டுமே கடைமடைப் பகுதி குறுவையைக் காப்பாற்ற முடியும். ஆனால் கர்நாடகாவில் அவ்வளவு நீரே😛 இல்லை.
கூட்டணி கட்சியிடம் தி.மு.க வினால் சாதிக்க முடியாததை ஆணையத்தின் மூலமே சாதிக்க முடிந்தது.... பின் எதுக்கு இங்கே தி.மு.க ஆட்சி கூட்டணி காங்கிரஸுக்கு கால் பிடிக்கவேண்டும் ....?