"2 பெண்களால் வன்கொடுமைக்கு ஆளானேன்": ஆஜரான பின்னர் சீமான் பேட்டி

புகார் வாபஸ்
நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன் பேரில், சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பினா். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதற்கிடையே, கடந்த செப்.,15ம் தேதி சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.
ஆஜர்
இந்நிலையில், போலீசாரின் சம்மனை ஏற்று வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக சீமான் இன்று(செப்., 18) ஆஜரானார். அவரது மனைவி கயல்விழி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
வன்கொடுமை
போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
நகைச்சுவை
13 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கால் எனக்கு தான் வன்கொடுமை நடந்துள்ளது. பெண் வன்கொடுமையை பேசுகிறவர்கள், ஆண்களுக்கு நிகழும் வன்கொடுமையையும் பேசுங்கள். இந்த பிரச்னையில் என் மனைவி கயல்விழி எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். என் பெருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்த வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரும் நகைச்சுவை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (31)
போங்கடா - வேற பக்கம் போயி விளையாடுங்கடா -
பிரபாகரனுக்கு அறிவுரை கூறிய சிங்க தலைவன் சீமானை ரெண்டு பெண்கள் வன்கொடுமை செய்துவிட்டார்கள் என்பது சிங்கத்திற்கே இழுக்கு.
இவர் மான நஷ்ட வழக்கு போடலாமே.
இவனச் சுத்தியும் ஒரு கூட்டம்! வெட்கக்கேடு!
நன்றாகச் சொன்னீர்கள். சீமான் / சைமன் ஒரு பச்சோந்தி. எதிலும் நேர்மை இல்லாதவர். ஆனாலும் மக்கள் அவரை நம்புகிறார்கள். பேசக்கூடிய இன்னொரு அரசியல்வாதி
அவனா நீயி!!