Load Image
Advertisement

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; வரலாறு மற்றும் சிறப்புகளை அறிவோம்

vinayakar chathirthi 2023: Today is Ganesha Chaturthi celebration; Know the history and specialties    இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; வரலாறு மற்றும் சிறப்புகளை அறிவோம்
ADVERTISEMENT
இன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் விநாயகர் ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி மதங்களைத் தாண்டி உலகின் பல்வேறு நாட்டு மக்களை இணைக்கிறது. இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருந்தும் விநாயகருக்கு ஏன் இந்த தனிச் சிறப்பு, விநாயகர் சதுர்த்தி தினம் எப்படி இவ்வளவு பிரபலமாகியது எனத் தெரிந்துகொள்வோம்.

பாரத சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரே வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா உருவாகக் காரணகர்த்தா.

மூத்த காங்கிரஸ் தலைவரான திலகர், ஓர் சுதந்திரப் போராட்டத் தியாகி. இவர் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர்.
Latest Tamil News
திலகர் இந்து மதத்தின் மீது அதீத பற்று கொண்டிருந்தார். வெள்ளையர்கள் ஆட்சியின்போது வீட்டில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தியை ஒரு பொது ஊர்வல விழாவாக நடத்தத் திட்டமிட்டார்.

இதன்படி பிரம்மாண்ட விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்று ஆற்றிலும், கடலிலும் கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலத்தின்போது வாணவேடிக்கைகள் வெடிப்பது, டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிப்பது, மலர் தூவுவது, கேளிக்கை நடனம் ஆடுவது உள்ளிட்ட செயல்கள் மஹாராஷ்ட்ராவில் பிரபலமாகின.

திலகரின் இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் பின்னர் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவால் பின்பற்றப்பட்டது.

மஹா.,வில் சிவசேனா ஆட்சியின்போது விநாயகர் ஊர்வலம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு உலக மீடியாக்களின் கவனத்தைப் பெற்றது.
Latest Tamil News
இன்று வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸி., சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகரை வணங்கி படத்தை துவக்காத சினிமா தயாரிப்பாளர்கள் இல்லை. மாஸ் ஹீரோக்கள் பலர் பல மொழிப் படங்களில் விநாயகரை வணங்குவதுபோல காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

இன்று விநாயகருக்குப் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சீயம், அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்புகள் பல தயாரிக்கப்பட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

விநாயகர் சிலைகள் விற்பனை கடைகளில் சூடுபிடித்துள்ளது. களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க பலர் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

    பிரமாண்ட விநாயகர் சிலைகள், ஓடும் நீரில் கரைப்பது போன்ற வழக்கங்கள், ஊர் கூடி குளம் தூர்வார பெரியவர்கள் காட்டிய வழிமுறையாய் இருக்கலாம். விநாயகர் சத்துரத்தி பெரும்பாலும் மழை காலம் தொடங்கும் சமயத்தில் வருகிறது. வீட்டுக்கு வீடு ஆளுக்கு ஒரு கைப்பிடி களிமண்ணை குளம், குட்டை, ஏறி போன்ற நீர் நிலைகளில் இருந்து எடுத்தால் நீர் நிலைகள் ஓரளவு அல்லது நன்றாகவே தூர் வாரப்பட்டு மழைக்காலத்தில் நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் உயரவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கலாம். எடுத்த மண்ணை பிள்ளையாராக்கி ஓடும் தண்ணீரில் கரைத்து விட்டால் அடித்து கொண்டு சென்று விடும் என்பதால் இந்த பழக்கம் நடைமுறை படுத்தி இருக்கலாம் ..விநாயகர் சத்துத்தி வாழ்த்துக்கள்

  • Kanagaraj M - Pune,இந்தியா

    கல்வியும் செல்வமும் கொள்ள வேண்டி ஆசீவகத்தின் அடையாளம் பிள்ளையார்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement