Load Image
Advertisement

பட்ஜெட் விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்: இது விவோ ஸ்டைல்..!

Premium Smartphone at a Budget Price: Its Vivo Style..!   பட்ஜெட் விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்: இது விவோ ஸ்டைல்..!
ADVERTISEMENT
கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விவோ நிறுவனம் தனது பட்ஜெட் பிரீமியம் ஸ்மார்ட்போனான விவோ டி2 ப்ரோ 5ஜி செப்டம்பர் 22ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில், 6.7இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 64எம்பி மெயின் கேமரா, 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. செல்பிக்காக 16எம்பி முன்பக்க படக்கருவி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 66W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவாக போனை சார்ஜ் செய்ய முடியும்.

விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர 5ஜி பேண்ட்கள், வை-பை, ப்ளூடூத், டைப் சி சப்போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் ரூ.20ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படலாம்.


வாசகர் கருத்து (1)

  • S MURALIDARAN - Chennai,இந்தியா

    ரூபாய் இருபதாயிரம் என்பது பட்ஜெட் போனா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement