Load Image
Advertisement

"உலக அரங்கில் தெற்கின் குரலாக ஒலிக்கும் இந்தியா": பிரதமர் மோடி பேட்டி

"India as the Voice of the South on the World Stage": PM Modi Interview  "உலக அரங்கில் தெற்கின் குரலாக ஒலிக்கும் இந்தியா": பிரதமர் மோடி பேட்டி
ADVERTISEMENT

புதுடில்லி: ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. உலகின் அரங்கில் தெற்கின் குரலாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி பார்லி., வளாகத்துக்கு வெளியே நிருபர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் பார்லி., சிறப்பு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறினார்.


பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்.,18) துவங்கி, 5நாட்கள் நடக்கிறது. சிறப்பு கூட்டத்தொடர் துவங்கும் முன், பார்லி., வளாகத்துக்கு வெளியே நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது:

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிக்கரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். இந்திய தேசியக் கொடி இன்று நிலவில் உள்ளது. நமது சாதனையை கண்டு உலக நாடுகள் வியப்படைகிறது.


முக்கிய முடிவு

ஜி 20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. உலகின் அரங்கில் தெற்கின் குரலாக இந்தியா திகழ்கிறது. பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

2047ம் ஆண்டு இந்தியாவுக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான 'யஷோபூமி' என்ற சர்வதேச மாநாட்டு மையம் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தேன். இது போன்ற சாதனையை நிகழ்த்தும் போது அறிவியல், தொழில் நுட்பத்தில் பல வாய்ப்புகள் இந்தியாவின் கதவுகளைத் தட்டுகின்றன.


வளர்ச்சி பாதை

2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக, வரும் காலத்தின் அனைத்து முடிவுகளும், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் எடுக்கப்படும். இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் துணையாக இருக்க வேண்டும். பார்லி., கூட்டத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.வாசகர் கருத்து (17)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  India is now Definitely Developing......

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Super...

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ஆனால் வளரவிடாமல் செய்கின்றனர் ஒரு சில தேச துரோக கட்சியினர்.

 • SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா

  அப்போ பாரத் அவ்ளோதானா? அதானே பாத்தேன்

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  2047 ஆண்டிலும் பாஜக மதத்தையும் ஆன்மீகத்தையும் வைத்து தான் வாக்கு வாங்கும் நிலையில் இருப்பார்கள்

  • Bharathi - ,

   here nothing called other religion supposed to be here cos of some weakness among ppl they were being converted just to stop that we need to talk about religion here

  • ஆரூர் ரங் - ,

   மதசார்பற்ற நாடு என்பதற்கு மதமில்லாத நாடு என தவறாக பொருள் எழுதியது நேரு, இந்திராவும் திராவிஷ கும்பலும் கூட ஏற்க மறுத்தார்

  • Venkates.P - Rajapalayam,இந்தியா

   மதத்தையும் ஆன்மீகத்தையும் வைத்து தான் வாக்கு

  • DVRR - Kolkata,இந்தியா

   நேரு சொன்னது "மதசார்பற்ற நாடு என்பதற்கு "இந்து" மதமில்லாத நாடு என எழுதியது நேரு" என்பது மிகச்சரியான புரிதல்

  • N.K - Hamburg,ஜெர்மனி

   அப்பாவும் திமுக (ஒருவேளை இருந்தால்) பாதிரி முன்னாடி முட்டிக்கால் போட்டு, வழிபாடு இடத்தில் பிரச்சாரம் செய்யும்.

  • RAMESH - chennai,இந்தியா

   உன்னை மாதிரி சொரணையற்ற, நாக்கில் நரம்பில்லாத , இந்துக்கள் காசுக்கும் , ஓசிக்கும் , திராவிட காங்கிரஸ் கூட்டணிக்கு வோட்டு போடும் வரை BJP ஒவ்வொரு முறையும் போராடி தான் ஜெயிக்க வேண்டி வரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement