பார்லிமென்டின்75 ஆண்டு கால பயணம் குறித்து, முதல் நாளில் விவாதம் நடந்தது.
படுகிறது.வழக்கமாக, ஆண்டில்மூன்று முறை பார்லிமென்ட் கூடும். ஜன., மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும். ஜூலை - ஆக., மாதங்களில் மழைக்கால கூட்டத்
தொடரும், நவ., - டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடரும் நடக்கும்.
இந்நிலையில், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர், செப்., 18 முதல் 22ம் தேதி வரை
நடைபெறும் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது;
பல யூகங்களையும் உருவாக்கியது.
அனுபவங்கள்
இந்நிலையில், 1948ல் பார்லிமென்ட் அமைப்பு உருவாக்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி இந்த சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.இதன்படி பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் இன்று துவங்கியது.
இதில், பார்லிமென்டின், 75 ஆண்டு வரலாறுகள் குறித்தும், தங்கள் அனுபவங்கள் குறித்தும், எம்.பி.,க்கள் பேச உள்ளனர். நாளை (செப்-19) முதல், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் கூட்டத் தொடர் நடக்கும் என கூறப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டத் தொடரின்போது, பல முக்கியமசோதாக்கள் மீதான விவாதங்களும் நடக்க உள்ளன.
ஏதோ ஒரு திட்டம்
குறிப்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிப்பது
தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் இதழ்கள் பதிவு மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.பார்லிமென்டின், 75வது ஆண்டையொட்டியே இந்தக் கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், வேறு ஏதோ ஒரு திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதாகஎதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பு, இந்தக் கூட்டத்தொடரில் இடம் பெறலாம் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பார்லி.,யில் மூவர்ணக்கொடி
புதிய பார்லி., கட்டடத்தில் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், அர்ஜுன் ராம் மேஹ்வால், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., தேசிய தலைவரு மான மல்லிகார்ஜுன கார்கே
பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ''இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பாரதத்தின் வலிமை, சக்தி மற்றும் பங்களிப்பை உலகம்
அங்கீகரித்துள்ளது,'' என்றார்.
மோடியின் தொலைநோக்கு பார்வை
இன்றைய பார்லி.,யில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது: ஜி20 மாநாட்டை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக ஒவ்வொரு இந்தியரையும் பாராட்ட விரும்புகிறேன். இம்மாநாட்டை நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும் பாராட்டுகள். ஜி20 மாநாடு மூலம் இந்தியாவின் புகழ் உலக அரங்கில் மேலும் உயர்ந்துள்ளது. மாற்றத்திற்கான முக்கிய முடிவுகள் ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டன.
வாசகர் கருத்து (10)
குறிப்பா எந்த விஞ்ஞான ஊழல் வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது...
ஒரு அரசியல் கட்சியின் ஒரு பதவி வகித்தால் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. எந்த ஒரு பதவியை ராஜினாமா செய்தாலும் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட முடியாது.. .நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தால் வழக்கு முடியும் வரை அவரின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது.
மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதையும் பாஜ., பேச வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வேங்கை வயல் பற்றியும் நாங்குநேரி பற்றியும் பேச சொல்வீர்களா?
பெண் பிரதமர், முதல்வர்கள் இருந்ததால் ஆண் பெண் சமத்துவம் வளர்ந்து விட்டதா? ஊராட்சி நகராட்சி தலைவிகளால் நிர்வாகம் செழித்து விட்டதா?
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். எதிர்பாராத ஒரு அறிவிப்பு வர இருப்பதால், மருத்துவர்கள் திராவிடம், காங்கிரஸ்... அருகில் இருக்கவும்.