ADVERTISEMENT
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு புதுவித இனிப்புகளை செய்து படைக்க வேண்டும் என நம்மில் பலரும் எண்ணுவதுண்டு. அப்படி இந்த வருடம் புதிதாக தேங்காய் லட்டுவை செய்து விநாயகருக்கு படைத்து அவரது அருளை பெறலாம்.
நெய் - 2ஸ்பூன்
சர்க்கரை - 2ஸ்பூன்
வெல்லம் - 100கிராம்
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 4கப்
பால் - 1கப்
நெய் - 2ஸ்பூன்
சர்க்கரை - 2ஸ்பூன்
வெல்லம் - 100கிராம்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தையும் பொடியாக தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், நெய் சேர்த்து உருகியதும், தேங்காய் துருவல் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.
பிறகு அதனுடன் பால் மற்றும் பொடியாக்கி வைத்துள்ள வெல்லம் ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
5நிமிடம் கழித்து ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவேண்டும்.
இறுதியாக சூடு ஆறியதும், உருண்டையாக பிடித்து விநாயகருக்கு படைத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!