Load Image
Advertisement

இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு சவுதி மூலம் பண மழை கொட்டப்போகிறது!

Indian startups are going to be showered with cash by Saudi Arabia!   இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு சவுதி மூலம் பண மழை கொட்டப்போகிறது!
ADVERTISEMENT
சவூதி அரேபியா இந்தியாவில் முதலீடுகளை எளிதாக்குவதற்காக சாவரின் வெல்த் பண்ட் (SWF) அலுவலகத்தை இந்தியாவில் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. மேலும், வென்ச்சர் கேபிடல் மூலம் இந்திய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்ட இந்தியா - சவுதி அரேபியா முதலீட்டு மன்ற கூட்டத்தில் முதலீட்டு அமைச்சர் இதை அறிவித்தார். சவுதியின் முதலீட்டு அமைச்சர் காலிட் ஏ. அல் ஃபலிஹ், இது தொடர்பாக அடுத்த சில வாரங்களுக்குள், ஒரு அதிகாரிகள் குழுவை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.
Latest Tamil News
இக்குழு சவுதியின் தேசிய வென்ச்சர் கேபிடல் நிதிக்கும் இந்தியாவில் உள்ள அதன் இணை நிறுவனத்திற்கும் இடையே வென்ச்சர் கேபிடல் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளிப்பது என இரண்டு சந்தைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்கும். குஜராத்தில் உள்ள கிப்ட் சிட்டி, மும்பை மற்றும் புது டில்லியை இந்த குழு ஆராயும். இந்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் அலுவலகம் அமையும். கிஃப்ட் சிட்டி என்பது நிதிச் சேவைகளுக்கான பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம்.

சவுதி சந்தைக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யும் இந்திய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதில் சவுதி அமைச்சர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவில் சவுதியின் முதலீடுகள் ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2023 வரை ரூ.26 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த முதலீடுகள் சவுதி அரசாங்கத்திற்குச் சொந்தமான பொது முதலீட்டு நிதியம் மூலம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

சவுதி அமைச்சரின் முதலீட்டு ஆர்வத்தைக் கேட்டறிந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், ரியாத்தில் ஒரு அலுவலகத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதில் FICCI மற்றும் இன்வெஸ்ட் இந்தியா மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சில அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று அறிவித்தார்.

அடுத்த 6 மாதங்களுக்குள், இவை இரண்டையும் நடைமுறைக்கு கொண்டு வர இரு நாட்டு அமைச்சர்களும் ஓப்புக்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement