Load Image
Advertisement

அமெரிக்காவில் டிக் டாக் அனுமதி மறுபரிசீலனை?

Tik Tok Permit Reconsideration in US?    அமெரிக்காவில் டிக் டாக் அனுமதி மறுபரிசீலனை?
ADVERTISEMENT
சீனாவின் பைட் டேன்ஸ் மென்பொருள் நிறுவனத்தின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பு டிக் டாக். குறு வீடியோக்கள் என்கிற டிரெண்டை உலகறியச் செய்த செயலியாக டிக் டாக் புகழ்பெற்றது. 2016 ஆம் ஆண்டு டிக் டாக்கின் அறிமுகத்துக்குப் பின்னர் உலக இணைய வரலாறு புரட்டிப் போடப்பட்டது. டிக் டாக் மூலமாக பல்வேறு கலைஞர்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள் பலனடைந்தனர். டிக் டாக்கின் இடையே வரும் விளம்பரங்களால் பல தனியார் நிறுவனங்களுக்கு லாபம் குவிந்தது. இதனால் விளம்பரம் மூலம் டிக் டாக் அதிக லாபம் ஈட்டும் செயலியாகப் புகழ்பெற்றது.

சீன-இந்திய எல்லைப் போரில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக மோடி அரசு முன்னதாக டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்தது. ஆனால் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் டிக் டாக்கின் புகழ் மற்றும் வருமானம் பாதிக்கப்படவில்லை. பெய்ஜிங், லாஸ் ஏஞ்சலிஸ், சியோல், தென் கொரியா, மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் டிக் டாக்குக்கு அலுவலகங்கள் உள்ளன.
Latest Tamil News
டிக் டாக் தனது அல்காரிதம் மூலமாக அமெரிக்க பயனாளர்களில் தரவுகளைத் திருடி வருவதாகவும், இந்த தகவல்கள் ரகசியமாக சீன அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு ஒன்று நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை டிக் டாக் அடியோடு மறுத்து வந்தாலும் டிக் டாக் தொடர்ந்து அமெரிக்காவில் இயங்க அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னதாகத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டிக் டாக் நிறுவனத்தை தங்களுக்கு விற்றுவிடுமாறு ஜோ பைடன் கூற, இதற்கு பைட் டேன்ஸ் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், டிக் டாக்கை மீண்டும் அமெரிக்காவில் அனுமதிக்க அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.


வாசகர் கருத்து (1)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    நான் சொல்லல ? பைடன் நம்மூரு சர்வாதிகாரி ரேஞ்சுக்கு அறிவானவரு ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement