Load Image
Advertisement

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை உழவை போற்றும் விழிப்புணர்வு திருமணம்

 An awareness wedding celebrating the wedding ceremony made of 500 kg of vegetables   500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை உழவை போற்றும் விழிப்புணர்வு திருமணம்
ADVERTISEMENT

பல்லடம்:பல்லடம் அருகே நடைபெற்ற திருமணத்தில், 500 கிலோ காய்கறிகளால்
அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோவை மாவட்டம், அரசூரைச் சேர்ந்த ராமசாமி - -ஆனந்தி தம்பதியர் மகன் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம், பல்லடம், வேலம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - -சரஸ்வதி
தம்பதியர் மகள் கீர்த்தனா ஆகியோருக்கு பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில்
திருமணம் நடந்தது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவின் பெற்றோர், உழவு தொழிலை முன்னிறுத்தும் வகையில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை அமைத்திருந்தனர்.
மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் முழுமையாக
அலங்கரிக்கப்பட்டிருந்தது.மணமேடை, பூசணி, முட்டைகோஸ், காலிபிளவர், வெண்டை, முருங்கை, கேரட், பாகல், புடலை உள்ளிட்ட பல்வேறு வகை காய்களில், 500 கிலோ
எடையிலும், கரும்பு மற்றும் வாழை இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
உழவுத் தொழிலை முன்னிறுத்தும் வகையில் ஓவியங்களும், மணமேடையின் மேற்புறம், 'உழவு என்பது தொழில் மட்டுமல்ல உயிரின் ஆதாரம்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தன.
வண்ண விளக்குகள், பல வகையான மலர்கள் மற்றும் பேனர்களால், ஆயிரக்கணக்கில்
செலவு செய்பவர்கள் மத்தியில், விவசாய தொழிலை முன்னிறுத்தும்படி நடந்த இத்திருமணம், பலராலும் பாராட்டு பெற்றது.


வாசகர் கருத்து (2)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அரும்பாடுபட்டு வளர்த்ததை சமைத்து உண்ண வேண்டிய 500 கிலோ காய்கறிகளை மேடை கட்டி வீணாக்குவது தான் உழவை மேம்படுத்தும் வேலையா? போங்கடா நீங்களும் ஒங்க மேம்பாடும் 😡

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதற்கு சந்தோஷப்படுவதா? அல்லது இவ்வளவு காய்கறிகளை வீணாக்கியதற்காக வருத்தப்படுவதா? தெரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement