என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இதுவரை, 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' என, சமீபத்தில் தம்பட்டம் அடித்த முதல்வர் ஸ்டாலின், 'பிரதமர் மோடி பொய்யுரைகளை வழங்கி ஏமாற்றி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்' என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; தமிழகத்தில், 'நீட்' தேர்வு ரத்து; அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்; மாதந்தோறும் மின் கணக்கீடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிடச் செம்மல்கள் தான், சனாதனம் பற்றி பேசி, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகத்தை நன்றாகவே நடத்துகின்றனர்.
இவர்களின் அரசியல் ஆசான் அண்ணா துரை, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம்' என்று கூறி, ஆட்சிக்கு வந்து ஏமாற்றியதை மக்கள் மறக்கவில்லை. வாயால் வடை சுடுவதில் பலே கில்லாடிகளான திராவிடச் செம்மல்கள், 'பிரதமர் மோடி அன்னிய நாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவருக்கும், 15 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார்' என்று குறை கூறுகின்றனர்.
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்களான இவர்கள், கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரரான பிரதமர் மோடியை விமர்சனம் செய்வது ஆச்சரியமாக உள்ளது.ஹிந்து மத விரோதிகளான திராவிடச் செம்மல்களின் வாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாந்த காலம் மலை ஏறி விட்டது. எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மலர்வதை தடுக்க முடியாது.
'ஹிந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்' என, எண்ணும் இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, வரும் லோக்சபா தேர்லில் பா.ஜ., அணி அடையப் போகும் வெற்றி, ஹிந்துக்களின் ஒற்றுமையை இவர்களுக்கு காட்டும்; அதன்பின்னாவது, இவர்கள் அடக்கி வாசிப்பர் என, நம்புவோம்!
வாசகர் கருத்து (70)
அப்போ ஈ.வே .ரா பெரியார் ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னது என்ந ஆனது ?
ஒன்பது வருடங்களாக ஊழல் இல்லாத ஆட்சி, கொரானா காலத்தில் உணவு (அரிசி, கடலை) அளித்தது, கடந்த ஒன்பது வருடங்களாக குண்டு வெடிப்பு பயம் இல்லாமல் வாழ முடிந்தது, பத்து சதமானம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் ரிசர்வேசன், இந்தியாவை ஐந்தாவது பொருளாதார நாடாக்கியது, நாட்டின் பாதுகாப்பை பல படுத்தியது இப்படி பல சாதனைகளை செய்த மோடி ஐயா, பல்லாண்டு வாழ வேண்டும். மீண்டும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
Both the BJP and the DMK Cheats the People Simply ....
இந்தியாவின் பழங்குடிகள்.இருந்ததால் தான் அவர்களை நீங்க எல்லோரும் இந்துக்கள்னு சொல்ல முடிஞ்சுது. அப்புறமா வந்த வந்தேறிகள் நீங்க எங்க மார்க்கத்துக்கு வாங்கன்னு கொஞ்சம் பேரை இழுக்க முடிஞ்சுது.
இந்த இரண்டு திராவிட கட்சிகளும் அணிவதெல்லாம் வெள்ளை சட்டையும் வேட்டியும். சட்டபையிலும் இப்படிதான். ஆனால் ஆட்சிக்கு வந்தால் பண்ணுவ தெல்லாம் ஊழல்.வெண்மை தூய்மை யின் அடையாளம். எல்லாம் வேஷம் ஊரை ஏமாற்றுகின்றார்கள். இதில் வேறு கருப்பு கண்ணாடி. எல்லோருக்கும் தாங்கள் துறையென்ற நினைப்பு மக்கள் சேவைக்கு எந்த மரியாதையுமில்லை.