Load Image
Advertisement

நம் பாரத தேசத்திற்கு இறைவன் அருளிய கொடை... மோடி !

Gods gift to our Bharat nation...Modi!   நம் பாரத தேசத்திற்கு இறைவன் அருளிய கொடை... மோடி !
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:



பங்கஜம் கோபால ஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் -பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேசிப்பவர்களாக, அவரின் ஆதரவாளர்களாக, கோடிக்கணக்கானவர்கள் திகழ்வதற்கான, அரசியல் கலப்படமற்ற சில காரணங்கள்...

* இவரை என்றாவது, கலைந்த தலை, உடை, மற்றும் குழப்பமான மனநிலையில் யாராவது கண்டதுண்டா?

* நம் பிரதமர், ஒரு காவி அங்கி அணிந்த துறவியையும், ராணுவ உடை தரித்த சிப்பாயின் மிடுக்கையும், சாதாரண உடையில் உள்ள ஒரு தெய்வீக இளவரசரையும் ஒத்திருப்பது தான்

* எந்த உலகத் தலைவர்கள் மத்தியிலும், மோடியின் ஆளுமை மேலோங்கி காணப்படும்

* நாட்டின் பிரதமராக மிக உயர்ந்த பதவியில் இருந்த போதும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு போதும் ஆதாயம் செய்ததில்லை; அவர்களை ஊக்குவித்ததும் இல்லை. அவர்கள், வெகு சாதாரண வாழ்க்கையே வாழ்கின்றனர்

* மேலும் அவர், ஒருபோதும் தன் சொந்த நலனுக்காக, விடுமுறையோ, ஓய்வோ, எடுத்ததே இல்லை


* எப்போது பேச வேண்டும், எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பது அவருக்கு கைவந்த கலை

* இந்த, 73 வயதிலும் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்தாலும், ஒருபோதும் களைப்பாகவோ, அசதியாகவோ, காணப்பட்டதே இல்லை. மேலும் அவரிடம், மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வும் அமைந்திருப்பது, அற்புதம் கத்தியைப் போன்ற கூர்மையான பேச்சு, கச்சிதமான தெளிவு, திறன் மிக்க வார்த்தை பிரயோகம் போன்றவை மோடிஜியின் தனி முத்திரை

* முடிவெடுக்கும் திறன், புத்திசாலித்தனம், சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவித்து செயல்படுத்துதல், முழு ஈடுபாடு போன்றவை, அவரிடம் இருக்கும் தனித்தன்மைகளாகும்உலகின் எந்த கோடியில் தேடினாலும், கிடைப்பதற்கு அரிதான பொக்கிஷம் தான், கோடியில் ஒருவரான மோடி; இவர், நம் பாரத தேசத்திற்கு, இறைவன் அருளிய கொடை!


வாசகர் கருத்து (51)

  • sk -

    mudiyala

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அதே இறைவன் எதிர்க்கட்சியினர் என்கிற தேசதுரோகிகளையும் கொடுத்து சோதிக்கிறாரே...

  • Ranga - பாண்டிய நாடு, தமிழக ஒன்றியம். பாரதம்.,இந்தியா

    உண்மை முற்றிலும் உண்மை...

  • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

    வயிறு எரிந்து பேசும் அல்லது எழுதும் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் நிறைய பேர் அப்படி சொல்ல சொல்ல உற்சாகம் பெருக்கெடுத்து வருகிறது. இத்தனை பேர் கருத்து கொட்டுகிறார்கள் என்றால் நிச்சயம் அந்த மனிதர் ஆச்சர்யம் தானே. வாய் இருப்பவர் குறையை சொல்லுங்கள். எழுத முடிந்தவர்கள் எழுதுங்கள். வழக்கு தொடுக்க முடிந்தவர்கள் அதையும் சிறப்பாக செய்யுங்கள். வாழ்க வளமுடன். ஆனால் நலமாக வாழ vebdum ந்று நினைத்தால் இந்த பொறாமை பொல்லாங்கு இதை எல்லாம் குவித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் தூக்கம் கெடும் சாப்பிட முடியாது. Ulcer varum. Heart attack kooda வரலாம். 2024 மே மாத கடைசியில் முடிவு வரும் பொழுது எத்தனை பேருக்கு என்ன ஆகுமோ என்று நான் கவலை படுகிறேன். உடல் நலத்தை காக்க காழ்புணர்ச்சியை கட்டுக்குள் வைக்க வேண்டுகிறேன். இல்லை நான் எதையும் தாங்குவேன் என்று உடல் மன நலத்தை கெடுத்துக்கொண்டால் அதற்கும் மோடியை குறை சொல்லாதீர்கள். Bye bye Cherio

  • Sundaresan -

    Modi is a gift to us. He is a perfect leader to lead our nation and I dont see anyone to compare with him. He has got unique qualities that has lifted our country to new heights in the last few years. A well gifted prime minister who has got well capable colleagues in his cabinet, which we have not seen so far with earlier governments.If we lose his leadership in the next election, thats going to pull down our nation on many fronts and thats going to affect our dears and nears.I strongly hope for his decisive comeback in 2024 and take us further and far.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்