கோவில் நிலத்தில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றம்
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், நுாற்றுக்கணக்கான வணிக கட்டடங்கள் உள்ளன.
இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், அனுமந்தபுரம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கொட்டப்பட்டு, தரம் பிரித்து உரமாக தயாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு, அங்கு இருந்த குப்பை தீப்பற்றி எரிந்ததால், அங்கு குப்பை கொட்டுவது
நிறுத்தப்பட்டது. அதன்பின், கொளத்துார் ஊராட்சியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஊராட்சியில் பெறப்படும் குப்பை கொட்டப்பட்டது.இது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர். குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த 13ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம், கோவில் இடத்தில் கொட்டப்பட்டு குவிந்திருந்த குப்பை அகற்றப்பட்டது.குப்பை அகற்றும் பணியில், ஊராட்சியின் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!