Load Image
Advertisement

சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது: புகாரை வாபஸ் பெற்ற நடிகை பேட்டி

 Nobody can do anything to Seaman: Interview with the actress who retracted the report   சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது: புகாரை வாபஸ் பெற்ற நடிகை பேட்டி
ADVERTISEMENT
சென்னை: சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது சக்திவாய்ந்தவராக இருக்கிறார் என அவர் மீதான புகாரை வாபஸ் பெற்ற நடிகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: வரலட்சுமி என்பவரது வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி தனது சகோதரியுடன் வேறொரு இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் மேலும் நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்தி கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆனதாக நடிகை விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே
வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர் தன்னுடைய புகார் மனுவை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் :சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது சக்திவாய்ந்தவராக இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனிஒருவராக போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள யாரும் எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை .புகார் மீதான நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை .புகார் மனு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன். என அவர் கூறினார்.


வாசகர் கருத்து (41)

  • தமிழ்தேசத்தான் - Chennai ,இந்தியா

    இந்தம்மாவுக்கு வேற வேலையில்லை. காலக்கொடுமை 😂😂

  • ரமேஷ்VPT -

    எப்படியோ நீ கை தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்து விட்டாய்.

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    சீமானா கொக்கா... வீரலட்சுமி.. இப்ப விஜயலட்சுமி... எல்லாரையும் சரிக்கட்டி விடுகிறாரே... அப்படின்னா எத்தனை கோடி அவர் கிட்டஇருக்கும்.. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ எல்லாம் இவர் கிட்ட போகாதோ? ஓ.. பி டீம் ஆக இருந்தால் வம்படிவழக்கு வராதே...

  • venugopal s -

    இப்போது உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் சீமான் மீது தாமே முன்வந்து வழக்கு தொடுத்தால் பாராட்டுவோம்!

  • வேங்கையன் - தமிழர் நாடு,இந்தியா

    அடேய் இதே போலதான் கடந்த முறை சொல்லிவிட்டு சென்றார் ஆனால் மீண்டும் வந்தார் இல்லை அவரை கூட்டி வந்தார்கள் வழக்கு தொடுக்க சொல்லி வற்புறுத்தினார்கள் ஆகையால் பழைய வழக்கு விபரங்களை விட்டுட்டு புதுசா சில வதந்திகளை சேர்த்து வழக்கு தொடுத்தார்கள் அவரை வீரலக்ச்சமிகு சொந்தமான பண்ணைவீட்டில் வைத்து சொல்வதைப்போல நடக்க சொன்னார்கள் அவரும் வாங்கின காசுக்கு பேசினார் ஆனால் திராவிட கட்சிக்காரர்களின் தூண்டுதலில் வீரலட்சுமி தனியாக சீமானோடு மொத தொடங்கினார் மேலும் வீரலட்சுமி உணவுகூட கொடுக்காமல் விஜயலட்சுமியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் ஆகவே விஜயலக்ஷ்மி தப்பித்து வழக்கை திரும்ப பெற்று சென்றுவிட்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்