Load Image
Advertisement

இதே நாளில் அன்று

Todays that day  இதே நாளில் அன்று
ADVERTISEMENT
செப்டம்பர் 16, 2009

அரியலுார் மாவட்டம், தென்கச்சிப் பெருமாள் நத்தத்தில், கோவிந்தசாமி - கோவிந்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1942, ஜூன் 27ல் பிறந்தவர் சுவாமிநாதன்.தென்கச்சியில் பள்ளிப் படிப்பையும், கோவை வேளாண்மை கல்லுாரியில் விவசாயத்தில் பட்டமும் பெற்றார். 'குயில், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' உள்ளிட்ட இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார்.
நெல்லை அகில இந்திய வானொலியில், விவசாய ஒலிபரப்பு பிரிவில் எழுத்தாளராக சேர்ந்து, ஆசிரியரானார். 14 ஆண்டுகள் தினமும் ஒலிபரப்பான, 'இன்று ஒரு தகவல்' எனும் ஐந்து நிமிட நிகழ்ச்சியை வழங்கி, புகழ் பெற்றார்.
சென்னை வானொலி நிலைய உதவி இயக்குனராக, 2002ல் ஓய்வு பெற்றார். தனியார் தொலைக்காட்சியில், 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியை வழங்கினார். 'இன்று ஒரு தகவல், கடவுளைத் தேடாதீர்கள், மனசுக்குள் வெளிச்சம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.
'கலைமாமணி, பாரதி, பாரதிதாசன்' விருதுகளை பெற்ற இவர், 2009ல், தன், 67வது வயதில், இதே நாளில் மறைந்தார். தமிழர்களை,
தன் குரலால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த, 'கதை ராஜா' மறைந்த தினம் இன்று!


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement