ADVERTISEMENT
நடப்பாண்டு நோபல் பரிசு வெல்வோருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை, ரூ.7.50 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற துறைகளுக்கு நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், நோபல் கமிட்டி இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தாண்டு நோபல் பரிசு வெல்லும் நபருக்கு பரிசுத்தொகை, கூடுதலாக 1 மில்லியன் க்ரோனர்ஸ் சேர்த்து, மொத்த பரிசுத்தொகை 11 மில்லியன் க்ரோனர்ஸாக அதிகரிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பரிசுத்தொகையை நோபல் கமிட்டி, குறைத்தும், அதிகரித்தும் வருகிறது. இந்தாண்டு பரிசுத்தொகையை அதிகரித்திருப்பது, நோபல் கமிட்டியின் நிதி நிலைமை வலுவாக இருப்பதை காட்டுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்ஸ் என்பதில் இருந்து 8 மில்லியன் க்ரோனர்ஸ் ஆக குறைக்கப்பட்டது. 2017ல் 9 மில்லியன் க்ரோனர்ஸ் ஆக பரிசுத்தொகையை அதிகரித்தது. பின்னர் 2020ம் ஆண்டு, 2012ம் ஆண்டை போல, 10 மில்லியன் க்ரோனர்ஸ் ஆக அதிகரித்தது.
கடந்த பத்தாண்டுகளாக, ஸ்வீடனின் க்ரோனர்ஸ், யூரோவுக்கு எதிராக மதிப்பை 30 சதவீத மதிப்பை இழந்துள்ளது. தற்போது பரிசுத்தொகையை அதிகரித்திருந்தாலும், இது நோபல் பரிசு வெல்லுவோரை, ஸ்வீடனுக்கு வெளியே பணக்காரராக உணர வைக்காதென கூறப்படுகிறது.
அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள், 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2013ல், ஸ்வீடன் மதிப்பில் 8 மில்லியன்
க்ரோனர்ஸாக குறைக்கப்பட்ட போதிலும், சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இருந்தது.
வரும் அக்.,2ம் தேதி, முதலில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு திமுக அமைச்சரானால் ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாமே?