Load Image
Advertisement

பட்ஜெட் விலையில் 4கே ஃபயர் ஸ்மார்ட் டிவி: மிஸ் பண்ணிடாதீங்க..!

Budget Price 4K Fire Smart TV: Dont miss it!   பட்ஜெட் விலையில்  4கே ஃபயர் ஸ்மார்ட் டிவி: மிஸ் பண்ணிடாதீங்க..!
ADVERTISEMENT
ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. அதிநவீன அம்சங்களுடன் இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் டிவிகளுக்கு மார்கெட்டில் தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விலையில் 4கே அம்சத்துடன் கூடிய 43இன்ச் ரெட்மி ஃபயர் டிவியை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த 43 இன்ச் 4கே ஃபயர் ஸ்மார்ட் டிவியில், 3840*2160 பிக்சல், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. தியேட்டர் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெசல்-லெஸ் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது. குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராஸ்சர் வசதியை கொண்டுள்ளது. கேம் பிரியர்களை கவரும் நோக்கில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு கிராப்க்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் 2ஜிபி ரேம், 8ஜிபி ரோம் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும்.

அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. எனவே வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்ட இந்த ரிமோட் ஆதரவுடன் டிவியை அருமையாக இயக்க முடியும். குறிப்பாக அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்கள் ரிமோர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி மற்றும் டிடிஎஸ், விர்ச்சுவல் எக்ஸ் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

விலையை பொறுத்தவரையில் ரூ.26,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு சலுகையை பயன்படுத்தி 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை ரூ.24,999 விலையில் வாங்கலாம் என நிறுவனம் கூறியுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    படிக்க நல்லாத்தான் இருக்கு ஆனா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement