ADVERTISEMENT
பிரபல டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோவின் 'வசந்த காலத்தில் நியூனெனில் உள்ள பார்சனேஜ் தோட்டம்' என்ற ஓவியம், கடந்த 2020ல் நெதர்லாந்தில் திருட்டு போனது. கோவிட் சமயத்தில் சிங்கர் லாரன் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட கலைப்படைப்பு மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் மீட்கப்பட்டது. இது போன்ற உலகின் பிற அருங்காட்சியகம், ஓவிய கண்காட்சிகளில் திருடப்பட்ட 7 கலை படைப்புகள், அவற்றின் நிலை குறித்து பார்ப்போம்.
2020ம் ஆண்டு பிரான்ஸ் ஹால்ஸ் வரைந்த 'பீர் குவளையுடன் இரண்டு சிரிக்கும் சிறுவர்கள்' என்ற ஓவியம், 3வது முறையாக நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போனது. இந்த ஓவியம் விரைவில் மீட்கப்படுமென நம்பிக்கையுடன் உள்ளனர்.

உலக புகழ்பெற்ற லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், பாரிஸின் லூவ்ரேவில் திருட்டு போனது. அதன் பின்னர், 1913ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸில், மோனா லிசா ஓவியம் மீட்கப்பட்டது.
பாப்லோ பிகாசோ வரைந்த 'லீ பீஹான் ஆக்ஸ் பெட்டிஸ் பொய்ஸ்' எனப்படும் மாடர்ன் ஓவியம், 2010ம் ஆண்டு மே மாதம், பிரான்ஸின் பாரிஸில் இருந்து திருட்டு போனது. உலகளவில் அதிகளவில் திருட்டு போன கலைப்படைப்புகள் பிகாசோ வரைந்தது தான். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பிகாசோ ஓவியங்கள் திருட்டு போயுள்ளனவாம்.

ரெம்ப்ராண்ட் வரைந்த 'கலிலேயா கடலில் புயலில் கிறிஸ்து' என்ற ஓவியம், பாஸ்டனில் உள்ள இசபெல்லா ஸ்டூவர்ட் கார்ட்னர் அருங்காட்சியகத்தில் இருந்து 1990ம் ஆண்டு திருட்டு போனது. இருப்பினும், இன்று வரை, இந்த அரிய கலைப்படைப்பு மீட்கப்படவில்லை.

லியோனார்டோ டாவின்சி வரைந்த 'மடோனா வித் தி யார்ன்விண்டர் 'என்னும் ஓவியம், 2003ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் இருந்து திருட்டு போனது. பின்னர், 2007ம் ஆண்டு பத்திரமாக மீட்கப்பட்டது.
வின்சென்ட் வான் கோவின் மற்றுமொரு கலைப்படைப்பான 'மாண்ட்மேஜூரில் சூரிய அஸ்தமனம்' என்னும் ஓவியம், 1901ம் ஆண்டு திருட்டு போனது. சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு, நார்வேவில் மீட்கப்பட்டது.

நார்வே ஓவியர், எட்வர்டு முன்சின் 'தி ஸ்கீரிம்' என்ற ஓவியம், நார்வேயின் ஓஸ்லோவில் உள்ள முன்ச் அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2004ம் ஆண்டு திருட்டு போனது.
ரபேல் வரைந்த 'ஒரு இளைஞனின் உருவப்படம்' என்ற ஓவியம் இரண்டாம் உலக போரின் போது திருட்டு போனது. போலந்தில் உள்ள கிராகோவ் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போது திருடப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த கலைப்படைப்பும் மீட்கப்படவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!