ADVERTISEMENT
மதுரை : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னி்ஸை போலீசார் 2020ஜூ் 19ல் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் கைதாகினர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.
மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஸ்ரீதர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஸ்ரீதரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவது இது 5வது முறையாகும்.
வாசகர் கருத்து (4)
இவருக்காக வாதாடுகிற வக்கீலையும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சீக்கிரம் கேஸ் முடிச்சு துக்குல போடணும்