கரூர்: கரூரில் ரசாயன கலவையில் விநாயகர் சிலை தயார் செய்த உற்பத்தி கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
கரூர் சுங்ககேட் அருகில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலை தயாரிக்கு பணியில் ஈடுபட்டு வந்தனர். விநாயகர் சதுர்த்தி நெருக்கும் நிலையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்மரமாக நடந்தது. இங்கு, ரசாயனம் பொருட்கள் கலந்து சிலை உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட உதவி பொறியாளர் ஜெயகுமார் தலைமையில் சோதனை நடத்தினர்.

அதில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பவுடர் உள்பட ரசாயனம் பொருட்கள் தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த சிலைகளுடன், உற்பத்தி கூடத்தை சீல் வைத்தனர். இந்த சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவல் கிடைத்து வந்த இந்து சமய அமைப்பினர், அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு, வந்த போலீசார், அவர்களை சமானதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சிலை உற்பத்தி கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், அதன் உரிமையாளர்கள், பணியாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
வாசகர் கருத்து (17)
இந்துக்களே கொஞ்சமாவது மனம் ரோசம் மிச்சம் இருந்தால் எந்த டி ம் கே கட்சிகாரன் எவனாவது கோவில் பக்கம் வந்தால் அடித்து விரட்டி அனுப்புங்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் முஸ்லிம்களை பின்பற்றுங்கள். .
சுற்று சூழல் கெடாமல் எந்த பண்டிகையும் கொண்டாடப் படவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது . ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கத்தானே தடை? தயாரிப்பு கூடங்களை ஏன் மூடவேண்டும் ? சுற்று சூழலில் அவ்வளவு கவனமாக இருக்கும் அரசு என்றால் திருப்பூரில் நொய்யல் ஆற்றிலும், ஈரோட்டில் காவிரியில் , கலக்கும் சாய கழிவுகளை அகற்றி விட்டார்களா ? ஆற்று நீர்வளங்களை அழிக்கும் மணல் கொள்ளை நிறுத்தப்பட்டதா? மசூதிகளில் இருந்து தினமும் பல தடவை ஒளி பரப்பப்படும் கூவல் நிறுத்தப்பட்டதா ? கிருஸ்துமஸ் புது வருடபிறப்பு நாட்களில் மாசு கட்டுப்பாடு தடை இருக்கிறதா ? இந்து பண்டிகைகளை குலைக்க வேண்டும் . மக்களுக்கு இந்து பழக்க வழக்கங்களை மறக்கடிக்க செய்ய வேண்டும். கலாசாரங்களில்ருந்து விலக செய்ய வேண்டும் என்பதே இந்த இந்து எதிரி அரசின் முனைப்பான கொள்கை . அப்போது தான் வருங்காலத்தில் ஆபிரகாமிய மதங்களின் பெரும்பான்மை நிறுவப்படும் . ஆட்சி செய்ய அனுமதி கொடுத்த மாற்று மதத்தவர்க்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா ?
கஞ்சா விற்கிறவன், கள்ளச்சாராயம் விற்கிறவனை எல்லாம் விட்ருங்க ! ☺️விநாயகர் சிலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளிகளை நசுக்கும் திராவிட மாடல் ஒழிக ! வருடக்கணக்காக தயாரிக்கும் போது வேடிக்கை பார்த்து விட்டு இப்போது விநாயகர் சதுர்த்திக்கு 4 நாட்களே இருக்கும் போது பொய் குற்றச்சாட்டு சொல்லி சீல் வைப்பது ஏன் ???? இந்துக்களை நசுக்க நினைக்கும் திராவிடம் ஒழிக !☺️
திருட்டு திராவிட மடியல் அரசு இந்துக்கள் பண்டிகையை கொண்டாட விடாமல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை முயற்சி எடுக்கின்றது உருட்டு புரட்டு செய்து???டாஸ்மாக்னாட்டு நதிகளில் சாராய கழிவு சாயப்பட்டறை கழிவு மலக்கழிவு தினம் தினம் நடக்கின்றதே அது தவறேயில்லை ஒரு நாள் கொஞ்சம் கலப்படம் ஆனால் குடி முழுகப்போவதில்லை அதற்கு என்னா கூப்பாடு??? அதற்குத்தான் முதல் முடிச்சு போட்டது விநாயகர் சதுர்த்தி விடுமுறை 17 ந்தேதி என்று அறிவித்து பிறகு அது 18 ஆனது???அப்போது ஆட்சி செய்வது கிருத்துவன் என்று மிக மிக திட்ட வட்டமாக தெரிகின்றது இந்த கிறித்துவ பிச்சை அரசின் ஒவ்வொரு செய்கையிலும்
பிஜேபி ஏன் கோர்ட்டில் தடை வாங்க கூடாது