ADVERTISEMENT
ஜம்மு, எந்த வித நிலப்பரப்பு மற்றும் பருவ சூழ்நிலையிலும், எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய, 'ரோபோ' ராணுவ வீரரை உருவாக்கி, நம் ராணுவம் அபார சாதனை படைத்துள்ளது.
'வைபை' வசதி
ஜம்மு - காஷ்மீரின் ஜம்முவில் வடக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது.
இதைத் தவிர, பன்முக பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய, நான்கு கால்களுடன் உள்ள ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோபோ, 12 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடியது. உடல் வெப்பத்தை உணர்ந்து கொள்ளும் கேமராக்கள், ரேடார்கள் போன்றவற்றையும் இதில் பொருத்த முடியும். இதைத் தவிர, அதிநவீன ஆயுதங்களையும் இந்த ரோபோ சுமந்து செல்லும்.
'வைபை' வசதியுடன் உள்ள இந்த ரோபோவுடன் எங்கிருந்தாலும் தொடர்பு கொண்டு கட்டளைகள் பிறப்பிக்க முடியும். மேலும், அங்குள்ள நிலவரம் குறித்தும் ராணுவம் தெரிந்து கொள்ள முடியும்.
சில மாற்றங்கள்
குறுகிய துாரத்தில் இருந்து தொலை துாரம் வரை இந்த ரோபோ இயங்கக் கூடியது. தற்போதைக்கு, 10 கி.மீ., சுற்றளவுக்கு சுற்றி வந்து தன் பணிகளை இந்த ரோபோ செய்யும்.
சில மாற்றங்களுக்குப் பின், இந்த ரோபோ ராணுவ வீரரை, படையில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
வாசகர் கருத்து (4)
சபாஷ், ராணுவத்தை அடுத்த கட்டமாக இன்றைய டெக்னாலஜி பயன்படுத்தி Robo Military Man தயார்படுத்தி இருக்கிறார்கள்.
நல்ல முன்னேற்றம். இதையெல்லாம் பாஜகவினர் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். செய்தால் மட்டுமே போதாது. செய்யாமலே திமுகவினர் எவ்வளவு பில்டப் கொடுக்கிறார்கள்.
இது தான்டா மோடி....வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதுக்கே 2024 க்கு bjp க்கு ஓட்டு போட்டே ஆகனம்