ADVERTISEMENT
திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது புதுார் கிராமம். இந்த சாலை வழியாக திருப்பதி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் புதுாரை சுற்றியுள்ள எல்லப்பநாயுடுபேட்டை, குன்னவளம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு இந்த புதுார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர். இரவு 11:00 மணி வரை குறைந்தது, 30 பயணியராவது இங்கிருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இரண்டு வாரமாக இரவில் மின்விளக்கு எரியாததால் அப்பகுதி கும்மிருட்டாக காணப்படுகிறது. இதனால் இருளில் பெண்கள் பேருந்துக்கு காத்திருக்க அச்சமாக உள்ளது.
எனவே இந்த பகுதியில் இரவில் எரியாமல் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை அடுத்து மின்விளக்குகள் பழுது நீக்கப்பட்டு இரவில் எரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!