Load Image
Advertisement

எதிர்காலத்தில் வாய் வழியே கோவிட் தடுப்பு மருந்து!: ஜப்பானில் ஆய்வு

covid vaccine: In the future we can give oral prophylaxis.    எதிர்காலத்தில் வாய் வழியே கோவிட் தடுப்பு மருந்து!: ஜப்பானில் ஆய்வு
ADVERTISEMENT


எதிர்காலத்தில் ஊசிக்கு பதிலாக, எளிதாக வாய் வழியாக தடுப்பு மருந்தை செலுத்துவதன் மூலம் கோவிட் பாதிப்பை குணப்படுத்த முடியுமென ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ள உலகம் முழுவதும் தடுப்பூசி போடுவது கட்டாயமானது. ஊசி வாயிலாக தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. ஐப்பானை சேர்ந்த ஈபிஎஸ் இன்னோவேட்டிவ் மருந்து நிறுவனம், கைய்ஸூ நிறுவனத்துடன் இணைந்து, வாய் வழியில் எடுத்து கொள்ள கூடிய இம்யூனோகுளோபின் ஏ எனப்படும் கோவிட் தடுப்பு மருந்தை உருவாக்கியது.

இதனை முதல்கட்டமாக குரங்குகளுக்கு அளித்து மாதிரி சோதனை செய்து பார்த்தனர். தடுப்பூசி மருந்து சோதனையில், பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல், தேவையான பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கி உள்ளது. விரைவில் தடுப்பு மருந்தை வாய்வழியாக மனிதர்களுக்கு செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Latest Tamil News ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சியாளர் குழு வெளியிட்டுள்ள செய்தியில்,


வாய்வழியே செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து, சிறப்பாக செயல்பட்டது. வாய் வழியாக தடுப்பு மருந்தை அளிக்கும் போது, நுரையீரல், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் சளியை உருவாக்கும் வைரஸ்கள் உடனடியாக கொல்லப்பட்டன. சளியில் காணப்படும் ஆன்டிபாடிகளான இம்யூனோகுளோபின், கோவிட் வைரஸை காணாமல் போக செய்துள்ளது.

மூக்கு வழியே செலுத்தப்படும் மருந்துகள் வேலை செய்தாலும், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி உள்ளிட்ட பல பக்கவிளைவுகளை அளித்துள்ளது. மேலும் மூக்குவழியே தடுப்பு மருந்தை செலுத்தும் போது, சரியான இடம், அளவு கண்டறிவதில் சிக்கல் உள்ளது. வாய்வழி தடுப்பு மருந்து செலுத்தும் போது, எளிமையாகவும், சரியான இடம், அளவு அறிவதை வசதியாக இருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • S BASKAR - coimbatore,இந்தியா

    ஆக வந்த கொரோனாவ குணப்படுத்த மருந்து கண்டுபிக்க மாட்டீங்க. விதவிதமான தடுப்பு மருந்து மட்டும் கண்டுபிடிப்பீங்க. அப்பதான பிறக்கும் எல்லா குழந்தைக்கும் தடுப்பு மருந்து போட்டு காசு பாக்கலாம். ஆமா இப்போ கொரோனான்னு ஒண்ணு இருக்கா. நியூஸ்ல சொல்லவே இல்லை. எய்ட்ஸ், zica, இப்போது கொரோனா நடத்துங்க நடத்துங்க இனிமே புதுசா என்னன்னு முடிவு பண்ணிடீங்களா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement