Load Image
Advertisement

உலகின் முதல் உயிரினத்துக்கு தசை மற்றும் நரம்பு மண்டலம் இருந்ததா?

Did the worlds first creature have a muscular and nervous system?   உலகின் முதல் உயிரினத்துக்கு தசை மற்றும் நரம்பு மண்டலம் இருந்ததா?
ADVERTISEMENT
உலகின் 75 சதவீத பரப்பு கடலால் சூழப்பட்டுள்ளது. ஆழ்கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வசித்து வருகின்றன. கடலுக்கு அடியில் இரண்டு கி.மீ., தூரம் வரை மட்டுமே சூரிய ஒளியால் பயணிக்க முடியும். அதற்குக்கீழ் உள்ள கடல் பகுதி கும்மிருட்டாகக் காணப்படும். இந்த இருள் சூழ்ந்த கடல் பரப்புக்கு இரவு பகல் தெரியாது. இந்த கடல் பரப்பில் ஒருவித மயான அமைதி நிலவும். கடலின் மேல் பகுதியில் திமிங்கலங்கள் எழுப்பும் அதீத ஒலி மட்டும் அவ்வப்போது மிதமாக இங்கு கேட்கும். இந்த ஆழ்கடல் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரக கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

இவை சூரிய ஒளி இன்றி தங்கள் உடலில் ஒளிரும் வெளிச்சம் மூலமாக துணையைச் சேரும். இரையைப் பிடித்து சாப்பிடும். பெண் உயிரினங்கள் தங்களது வாரிசுகளை சிறுவயதில் வளர்க்கும். கடலின் அடியில் அதீத நீர் அழுத்தத்தில் வாழும் இவை கடலின் மேலே வாழும் சுறா, திமிங்கலம், சிறிய பெரிய மீன்கள் ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் கடலின் அடியாழத்தில் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது மனிதன் ஆழ்கடல் நீர்மூழ்கி ஓடம் கொண்டு கடலின் அடியாழத்துக்குச் சென்று இவற்றை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில் பல புதிய உயிரினங்கள் நாளுக்குநாள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
Latest Tamil News
உலகில் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிர் உருவாகிய நிலையில், பரிணாம வளர்ச்சி எவ்வாறு நடைபெற்றது என்கிற ஆய்வு தற்போதுவரை உலக நாட்டு விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கடலின் அடியாழத்தில் பரிணாம வளர்ச்சியில் முழுமை பெறா உயிரினங்களும் உள்ளன. தற்போது கோம்ப் ஜெல்லி எனப்படும் ஓர் புதிய கடல்வாழ் உயிரினத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை., உயிரியல் விஞ்ஞானி மைக் கெட்டில்மேன் கண்டுபிடித்துள்ளார்.

ஹோர்மிஃபோரா கலிஃபோர்னெஸிஸ் (Hormiphora californensis) என்னும் விலங்கியல் பெயர் கொண்ட இந்த உயிரினம் குறித்த சோதனையில் இந்த விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டது. இதன் பரிணாம வளர்ச்சியை சோதித்த விஞ்ஞானிகள் ஓர் வியத்தகு உண்மையைக் கண்டறிந்தனர். உலகின் முதன்முதலில் தோன்றிய உயிரினத்துக்கு தசையும் நரம்பு மண்டலமும் இருந்திருக்க வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் பல நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement