ADVERTISEMENT
விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்த பவன் கல்யாண், வரும் தேர்தலில் தன்னுடைய ஜனசேனா கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆந்திராவில், திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த, 371 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, 73, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தொடர்ந்து கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடத்தினார். சந்திரபாபுவுக்கு ஆதரவாக களமிறங்கிய பவன் கல்யாண், வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'ஜனசேனா கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்' என அறிவித்துள்ளார். கைது சம்பவத்தை அடுத்து ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது.
Jegan mohan Reddy kku Chandra Babu Naidu better