Load Image
Advertisement

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சியினர்: எச்சரிக்கையாக இருங்கள்: பிரதமர் மோடி பேச்சு

Opposition parties who want to destroy Sanathana: beware: PM Modi speech  சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சியினர்: எச்சரிக்கையாக இருங்கள்: பிரதமர் மோடி பேச்சு
ADVERTISEMENT

பினா: ''இன்று வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைத்து அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சியினர், நாளை நம் மீதான தாக்குதல்களையும் அதிகப்படுத்துவார்கள், அவர்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சென்றுள்ள பிரதமர் மோடி 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று (செப்.,14) அடிக்கல் நாட்டினார். 10 புதிய தொழிற்சாலை திட்டங்கள், பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்நிகழ்ச்சி மூலமாக மக்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு அளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் பல மாநிலங்களுக்கான பட்ஜெட் கூட ரூ.50,000 கோடியில் இருக்காது.

ஆனால் இன்றைக்கு ம.பி.,யில் மட்டும் 50,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்கள் மத்திய பிரதேச கட்டமைப்பை வலுப்படுத்தும். பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் அடையாளம் காணப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், இம்மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்தவர்கள், ஊழல் மற்றும் குற்றங்களைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா எவ்வாறு வெற்றிகரமாக நடத்தி காட்டியது என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை அனைத்தும் நாட்டு மக்களையே சேரும். இது 140 கோடி மக்களின் வெற்றி.

சனாதன தர்மம்எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு ஒரு தலைவர் கூட இல்லை. அவர்கள் இந்தியாவின் கலாசாரத்தைத் தாக்கும் மறைமுக செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சனாதன தர்மத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானத்துடன் 'இண்டியா' கூட்டணி உள்ளது. அவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகின்றனர், பல லட்சம் ஆண்டுகளாக உள்ள கலாசாரத்தையும், நம்பிக்கையையும் அழிக்க நினைக்கின்றனர். இது நம் நம்பிக்கை மீதான தாக்குதல்.

சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த அந்த 'சனாதன தர்மத்தை' இவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாளை நம் மீதான தாக்குதல்களையும் அதிகப்படுத்துவார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். சனாதன தர்மத்தை காத்திட ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து (34)

 • venugopal s -

  எதிர்க்கட்சிகளாவது சனாதனத்தை மட்டும் தான் அழிக்க நினைக்கின்றனர் ஆனால் நீங்கள் நாட்டையே ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கிறீர்களே!

 • PV முத்தூர் -

  ஒரே கட்சி ஒரே குடும்பம், இதுதா I.N.D.I.A கூட்டனி.

 • பைரவர் சம்பத் குமார் -

  1). பிரதமர் அரசியல் செய்யாமல் அவியலா செய்வர்.2). தமிழக பப்பு மற்றும் வட இந்திய பப்பு இருக்கும்வரை பிஜேபியின் வெற்றியை யாரும் தடுக்கவே முடியாது.3). மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை தேடுவதை விடுத்து மோடி எதிர்ப்பு என்றுமே தீர்வாகாது.4).எப்படியோ இண்டி கூட்டணி தூங்கி கொண்டு இருந்த நடுநிலை வாக்காளர்களை காது மேல் அறைந்து எழுப்பிவிட்டாகிவிட்டது.5). நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 மாநிலம் பிஜேபிக்கு இண்டி கூட்டணி உறுதிப்படுத்திவிட்டது. மற்ற இரண்டிலும் டஃப் ஃபைட் பிஜேபி கொடுத்து கணிசமான இடங்களை பிடிக்கும்.6).காங்கிரஸுக்கு இருந்த கடைசி வெற்றி முயற்சியும் லொள்ள கண்ணு ஆகிவிட்டது.7). வரும் 2024 தேர்தல் காங்கிரஸின் கடைசி அத்தியாயம் எழுதும் தேர்தல் என்பது முடிவாகி விட்டது.8). எல்லா புகழும் விளையாட்டுத்துறை அமைச்சரையே சாரும்.9). ஓன்மேன் ஆர்மியாக கூடவே சாரதி ராசாவுடன் சேர்த்து முடித்து வைத்தார் என சரித்திரம் போற்றும்.10). வரும் 2024 அப்புறம் நோ இண்டி அல்லது நோ அதர் கூட்டணி.11). பிஜேபி இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் இந்த பாரத தேசத்தை வலுபடுத்தும்.

 • Kanagaraj M - Pune,இந்தியா

  சனாதனத்தில் மக்களுக்கு பிடிக்காத எதாவது விஷயம் இருந்தால் நீக்கிவிடுங்கள்...

 • Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா

  சனதனம் என்பது இல்லம் மக்கள் மறந்து டெமோ கால ஆச்சு திடீர் தலைவர் அமுலாக்க துறையின் நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்ப எடுத்து விட்டதை பிஜேபி பெரிசாக்கி publicity தேடுகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்