Load Image
Advertisement

பா.ஜ., தந்திரத்திற்கு இடம் தராதீர்கள்!

BJP, dont give room for tactics!  பா.ஜ., தந்திரத்திற்கு இடம் தராதீர்கள்!
ADVERTISEMENT
சென்னை: 'சனாதனம் விவகாரத்தில், எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்து விடக் கூடாது' என, தி.மு.க.,வினருக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:எந்த ஒரு பிரச்னையையும் உள்நோக்கத்தோடு திரித்து, பூதாகாரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்னைகளை மறக்கடிக்க செய்து, மக்கள் கவனத்தை திசை திருப்புவதில், பா.ஜ.,வினர் வல்லவர்கள்.

நாட்டில் பற்றி எரியும் எந்த பிரச்னைக்கும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. ஆனால், 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என, மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு போடுகிறார்.

சனாதனம் பற்றி, மத்திய அமைச்சர்களில் யாராவது ஒருவர், தினம்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி, மக்கள் கவனத்தை திசை திருப்ப பார்க்கின்றனர்.

பா.ஜ,, ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு இடமளித்து விடக் கூடாது. 'இண்டியா' கூட்டணி உருவான பின், பா.ஜ.,வுக்கு நடுக்கம் வந்து விட்டது. பா.ஜ., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்களுக்கு முடிவுரை எழுதி, இண்டியா கூட்டணியை அரியணையில் அமர்த்த, மக்கள் தயாராகி விட்டனர் என்பதை உணர்ந்த, பா.ஜ., ஆட்சியாளர்கள், இப்போது நாட்டின் பெயரையே மாற்ற துணிந்து விட்டனர்.

நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில், இண்டியா கூட்டணி கட்சிகள், மகத்தான வெற்றியை பெற்றுள்ளன. இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கான அடையாளமாக, இது அமைந்துள்ளது.

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடிப்பதன் வாயிலாக, நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல, அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும், நாம் இடமளித்து விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (54)

 • Sanghi - Thirukkuvalai,இந்தியா

  விடியலு மக்களின் கவனத்தை திசை திருப்புவது யாரென்று அனைவருக்கும் தெரியும். குன்றிய நிர்வாகம் சீர்கெட்டு போய் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதாக்குறைக்கு ஊழல் கறை வேறு. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட கொடுத்த வண்ணம் நிறைவேற்றப்படவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் மக்கள் கவனத்தை திசை திருப்புவது? உங்கள் குடும்ப கொத்தடிமைகள் ஏமாற்றலாம். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இனி எந்த இந்துவும் உங்களுக்கு வோட்டு போடமாட்டான். காவடி, வேல் தூக்கினாலும், பிள்ளையார் பொம்மையை கையில் ஏந்தி போஸ் கொடுத்தாலும் எவனும் ஏமாறமாட்டான்.

 • Sathyam - mysore,இந்தியா

  அனைத்து மோசடி குண்டர்கள், இந்து எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு குழு மிஷனரி நிதியுதவி மற்றும் ஜிஹாதி ஆதரவு கூறுகள் ஒன்று இடம், மோசமான அதிர்ஷ்டம். இந்த பிழையாளர் ஃபெகு ராகுல் காந்தி குடும்பம், அன்டோனியோ மைனோ சோனியா இட்லையன் மாஃபியா பெண், எதிர்ப்பு தேசியவாதிகள், அராஜகவாதிகள், சொரோஸ் கும்பல்கள், மிஷனரி ஆதரவு கட்சிகள், முல்லாவுக்கு ஆதரவான இடதுசாரிகள், விஷப் பூச்சிகள், கரையான்கள், கெஜ்ருதீன்/நிதீஷ் குமார்/சுடலை(எம்.கே. ஸ்டாலின்)/தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற வஞ்சகர்கள்/குண்டர்கள் மோசமானவர்கள் சாம்லியன் மற்றும் மிகவும் நம்பத்தகாத அரசியல்வாதி மற்றும் மிகவும் சுயநலவாதி மற்றும் எப்போதும் ஜிஹாதிஸ்டு மற்றும் தி. பாட்னாவில் NIA ரெய்டுகள் மற்றும் பின்னர் PFI தடை செய்யப்பட்டதன் காரணமாக அவர் NDA வில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம். இது கெஜ்ருதீன்/சுடலை/நிதீஷ் குமார் ஆகியோரை குழப்புகிறது அவர்களின் ஆளும் மாநிலங்களை அழித்து, வாழவோ அல்லது எதையும் சம்பாதிக்கவோ முடியாத மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. ஏன் இவ்வளவு என்று கவனியுங்கள் பீஹாரிகள்/வங்காளிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களுக்கு குறைந்த ஊதியத்திற்கு செல்கின்றனர். பீகார் அதிக எண்ணிக்கையை உற்பத்தி செய்கிறது ஐஏஎஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் தூதர்கள் ஆனால் இன்னும் பீகார்/வேஸ்ட் வங்காளம் பல ஆண்டுகளாக மோசமான மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த வஞ்சகர் நிதிஷ், லாலு/மம்தா பேகம் ஆகியோருடன் சேர்ந்து பீகார்/மோசமான வங்காளத்தை சீரழித்தது மட்டுமல்லாமல் கற்பழித்துள்ளார். இன்று எந்த முட்டாளும் அல்லது விவேகமுள்ள நபரும் பீகார்/வாட் வங்காளத்தில் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள், ஏனெனில் இல்லை என்ற அர்த்தமோ அல்லது வார்த்தையோ உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு. நிதிஷ்குமார் எப்போதுமே சந்தர்ப்பவாதவாதி. அவர் எப்போதும் தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்ததில்லை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகவும் நல்லெண்ணம் கொண்டவராகவும் அந்த நாட்டிற்குச் செல்ல விரும்பினார். அவர் மோசடி செய்பவர்களில் ஒருவர் மற்றும் மூன்றாம் தர அயோக்கியன் யார் ஆர்டிகல் 370ஐ அகற்றுவதை எதிர்த்தார். பீகார்/வேஸ்ட் வங்காளத்தின் முரண்பாட்டைப் பாருங்கள் நிறைய பயிற்சிகள் மற்றும் பயிற்சி மையம் இருந்தபோதிலும், மோசமான மற்றும் விரும்பத்தகாத நிலை. நான் சமமாக லாலு, இந்த 3வது விகித நிதீஷ் குமார் போன்ற விஷம தீயவர்களுக்கு வாக்களித்த பீஹாரிகளை குற்றம் சாட்டவும். பீஹாரிகளும் கூட TN போன்ற மாநிலத்தின் இத்தகைய நிலைமைக்கு சமமான பொறுப்பு. இந்த பகர் நிதீஷ் குமார்/மம்தா பேகத்தை கற்பனை செய்து பாருங்கள் அராஜகவாதி கெஜ்ருதீன் பிரதமர் வேட்பாளராக ஆசைப்படுகிறார், அது முத்து அல்லது மலர் மாலை கொடுப்பது போன்றது அல்ல. குரங்கின் கைகளில் சிக்கிய பன்றி, அதைத் துண்டு துண்டாகக் கிழித்து அழித்துவிடும், நிதீஷ் குமார் என்றால் அதுதான் நிலைமை. / மம்தா பேகம் / கெஜ்ருதீன் / ரவுல் காந்தி போலி கிராக் முரடர்கள் இந்த நாட்டின் பிரதமராகிறார்கள்.

 • Sathyam - mysore,இந்தியா

  சனாதனவாதிகளுக்கான பிரதமர் மோடியின் அறிக்கை இது. இன்று இவர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். நாளை இவர்கள் நம் மீதான தாக்குதல்களை அதிகரிக்கப் போகிறார்கள்.நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு சனாதனிகள், இந்த நாட்டை நேசிக்கும் எவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனாதனத்தை அழித்து தள்ள ஐ.என்.டி.ஐ கூட்டணி விரும்புகிறது. நாடு ஆயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனத்தில் உள்ளது.ஆனால் நாம் ஒன்றுபட்டு இத்தகைய சக்திகளை நிறுத்த வேண்டும்.நமது ஒற்றுமையுடன் நாம் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.நீங்கள் ஒரு வைட் பந்தை அவர் மீது வீசுங்கள், அவர் அதை வேலிக்கு மேல் அடித்தார்

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  வல்லவர்கள் என்று மற்றையோரை கூறுமுன்னர் ஐயோ கொல்லுறாங்களே என்று சவுண்ட் கொடுத்தது யாரு? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

 • balakrishnan - Mangaf,குவைத்

  நீங்கள்தான் பிஜேபி இன் ஸ்டார் பிரச்சாரக் .நீங்கள் வெளியில் வந்து பேசினாலேபோதும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்