Load Image
Advertisement

சிறையில் இருந்து தப்பிய மகனை ஒப்படைத்த பெற்றோர்

 Parents who surrendered their son escaped from prison   சிறையில் இருந்து தப்பிய மகனை ஒப்படைத்த பெற்றோர்
ADVERTISEMENT
ராய்ச்சூர்: சிறையில் இருந்து தப்பி வந்த கொலை வழக்கின் விசாரணைக் கைதியை, அவரது பெற்றோரே போலீசில் ஒப்படைத்தனர்.

ராய்ச்சூர், தேவதுர்காவின், கப்பூரு கிராமத்தில் வசிப்பவர் அன்வர் பாஷா, 28. இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவரோ, திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதைக் கண்டித்த கள்ளக்காதலியின் கணவரைக் கொலை செய்தார்.

இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். தேவதுர்கா கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். செப்., 3ல், சிறைக் காவலர்களின் கண்களில் மண்ணைத் துாவி, சிறையில் இருந்து தப்பினார். இவரை போலீசார் தேடி வந்தனர்.

வீட்டுக்கு வந்த அன்வர்பாஷாவை, அவரது பெற்றோரே, நேற்று முன்தினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறையில் இருந்தபோது, இரண்டு குழந்தைகளின் நினைப்பு வாட்டியுள்ளது. அவர்கள் கனவிலும் வந்ததால், அவர்களை பார்க்க, சிறையில் இருந்து தப்பியதாக அன்வர் பாஷா கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement