Load Image
Advertisement

4 மசோதா தாக்கல் செய்ய முடிவு: பார்லி., சிறப்பு தொடர் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

Centre Releases Agenda Of Parliament's Special Session Starting Monday 4 மசோதா தாக்கல் செய்ய முடிவு: பார்லி., சிறப்பு தொடர் நிகழ்ச்சி நிரல் வெளியீடு
ADVERTISEMENT
புதுடில்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வரும் 18 - 22 வரை பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதில், 18ம் தேதி மட்டும், பழைய பார்லி., கட்டடத்தில் கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 19 முதல், புதிய பார்லி., கட்டடத்தில் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்த சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி, 75 ஆண்டு கால பார்லி., பயணம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா - 2023; பத்திரிகை மற்றும் காலப் பதிவு மசோதா - 2023 ஆகியவை லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளன. இந்த மசோதாக்கள், கடந்த ஆக., 3ல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன.

இதே போல், தபால் அலுவலக மசோதா - 2023; தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதா - 2023 ஆகியவை, ராஜ்யசபாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பார்லி,. சிறப்பு கூட்டம் : 4 மசோதா தாக்கல் செய்ய முடிவு... அந்த நான்கு மசோதாக்களையும் தாக்கல் செய்ய முடியாமல், 'தடங்கல்' செய்ய எதிர் கட்சியினர்/தேச துரோக கட்சிகள் முடிவு...

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    ஒரே நாடு ஒரே தேர்தல், தமிழகம் நான்காக பிரிப்பு, தமிழகம் மற்றும் கர்நாடக சட்டசபை கலைத்துவிடுவது ஆகியன அரங்கேறும்.

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    என்ன இது DESIGN . ஒன்று தெரிகிறது MODI PENTAGON போல கட்ட நினைத்து கட்டிவிட்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement