சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வரிடம் ஸ்டாலின் பேசாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு, எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது தான். 21ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது, அதற்குள் கர்நாடகத்தின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். வரும் 21ம் தேதி வழக்கில் என்ன நிலைமை ஏற்படுகின்றது என்பதை பொறுத்து அடுத்த கட்டமாக அனைத்து கட்சி கூட்டம் குறித்து யோசிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலின் பேசாமல் இருப்பது ஏன்?
"இண்டியா" கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வரிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே? ஸ்டாலின் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே? என செய்தியாளர் ஒருவர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் அளித்த பதில்: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.
எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். என்றார்.
கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு, அதெல்லாம் எனக்குத் தெரியாது என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
வாசகர் கருத்து (30)
விடியல் முதல்வர் கேட்பார் - எப்போது என்றால் அவர்கள் நடத்தும் சாராய கம்பெனிகளுக்கு தண்ணீர் பஞ்சம் என்றால் உடனே நேராக சென்று கேட்பார். இப்போ என்ன அவசரம் - விவசாயிகள் தானே? ரொம்ப கட்டாயப்படுத்தினால் எங்களுக்கா வோட்டு போட்டிங்க என்றும் கேட்பார்கள்
திரு துரை முருகன் கூறுவது சரி. இதெல்லாம் பேசி தீர்க்கும் என நம்பினால் வழவழ கொழ கொழன்னுதான் முடியும். சரி என்பார்கள் தாமத படுத்துவார்கள் ஆட்சி மாறினால் நிறுத்தி விடுவார்கள். இந்த வம்பே வேண்டாம். உச்ச நீதிமன்றம்தான் இந்நாட்டின் தலையான நீதிமன்றம் அதன் இறுதி தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் இல்லாவிடில் தக்க தண்டனை உண்டு யாராக இருந்தாலும் சரி. திரு துரை முருகன் சொல்வது சரியே.
விடியலால தமிழகத்துக்கு விடிவே கெடயாது. வருண பகவான் அருளாலே கர்நாடகால மழை கொட்டி, அவங்களால தண்ணி தேக்க முடியாம உபரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு தள்ளி விட்டதா தான் உண்டு. மக்கள் வருணனை வழிபடுங்க போதும். பிரச்னை தீரும்.
இவனுங்க புத்தி தெரியாதா? அடுத்த ரெண்டு வருசத்துக்கு மீடியா காவேரி பத்தி என்ன கேள்வி கேட்டாலும், வழக்கு நிலுவையில் உள்ளது நீதிமன்றம் தன் கடமையை செய்யும் ன்னு பதில் வரும்.
மணிப்பூர் பிரச்னைக்கு பிரதமர்மோடி ஏன்..போகவில்லை எனகேள்வி கேட்ட மானஸ்தன்கள்கர்நாடகாவுக்கு காவிரி பற்றிபேச கூடாது என கேட்கலாமே..