Load Image
Advertisement

58 ஆண்டுகளுக்கு முன் எருமை திருடியவர் கைது

karnataka: Man arrested for stealing buffalo 58 years ago   58 ஆண்டுகளுக்கு முன் எருமை திருடியவர் கைது
ADVERTISEMENT
பீதர் கர்நாடகாவில், எருமை மாடு திருடிய வழக்கில் கைதாகி ஜாமினில் வந்து, தலைமறைவான நபர், 58 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், பால்கி மேஹாகர் பகுதியில் வசித்தவர் மல்லிதர்ராவ்குல்கர்னி. விவசாயி. இவர் வளர்த்து வந்த இரண்டு எருமை மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை, 1965ம் ஆண்டு, மஹாராஷ்டிராவின் லாத்துார் தகலஹான் கிராமத்தைச் சேர்ந்த கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகியோர் திருடினர். இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

ஜாமினில் வந்தவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வழக்கை போலீசார் நிலுவையில் வைத்தனர்.

இந்நிலையில் பீதர் எஸ்.பி., சன்னபசவண்ணா லங்கோடி, நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை முடிக்க, கடந்த சில நாட்களுக்கு முன், போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து எருமை மாடுகள் திருடப்பட்ட வழக்கை, மேஹாகர் போலீசார் விசாரித்தனர். அப்போது கிஷன் சந்தர் தன் சொந்த ஊரில் வசிப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தற்போது வயது 80. நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணபதி விட்டல், 2006ல் இறந்ததும் தெரிய வந்துள்ளது. மாடுகள் திருடிய வழக்கில், 58 ஆண்டுகளுக்கு முன், 22 வயதில் கைது செய்யப்பட்ட கிஷன் சந்தரை, அவரது, 80 வயதில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (12)

  • குமரி குருவி -

    இத்தனை காலம் புகார் மனுவை கட்டிக்காத்த காவல்துறையின் கடமையுணர்வு மெய்ச்சிலிர்க்க வைத்தது

  • srinivasansundar - Pondicherry,இந்தியா

    மிகவும் சுறுசுறுப்பாக..... கருமமே கஷ்டமே ...........

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    லட்சம் கோடிகளில் கொள்ளையடிப்பவர்களை பிடிக்க துப்பில்லை. அப்படியே பிடித்தாலும் சிறையில் சொகுசாக வைத்துள்ளீர்கள்.

  • mei - கடற்கரை நகரம்,மயோட்

    தினம் திருடிக்கொண்டிருக்கிற திமுக வை ஏன் விட்டு வச்சிருக்கீங்க?

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    திருடியவன் கிழவனாகி விட்டான். ஆனால் அருகில் உள்ள எருமை நன்றாக வளர்ந்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement