ADVERTISEMENT
வேலைவாய்ப்பு சந்தையில், எந்த வேலைக்கு அதிக டிமாண்ட் இருக்கிறதோ, அதற்கேற்ப வளர்ச்சி இருக்கும். தற்போதைய நிலையில், தேவை மற்றும் துறை சார்ந்த விரிவாக்கத்தால், கீழே குறிப்பிட்டுள்ள வேலைகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். அதற்கேற்ப படிப்பை தேர்வு செய்து படிப்பதால், வேலைவாய்ப்பில் விரைவான வளர்ச்சியை காணலாம். அடுத்த 5 ஆண்டுகள், அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள வேலைகள் குறித்து பார்ப்போம்.
1. டேட்டா அனாலிஸ்ட் & சயின்டிஸ்ட் :
தொழில்களில் தரவுகள் அடிப்படையில் முடிவெடுப்பது அதிகரித்து வரும் சூழலில், டேட்டா அனலிஸ்ட் மற்றும் சயின்டிஸ்டுகளுக்கு தேவை அதிகரிக்குமென கூறப்படுகிறது. இவர்களின் பணி தரவுகளை வைத்து, தொழிலில் சரியான முடிவுகளை எடுக்க உதவுவது ஆகும்.

2. சாப்ட்வேர் டெவலப்பர் :
தகவல் தொழில்நுட்ப துறை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி முன்னேறும் போது, புதிய அப்ளிகேஷன், தீர்வுகளை காண்பதில் சாப்ட்வேர் டெவலர்ப்பர்கள் முக்கிய பங்காற்றுவர். தொழில்நுட்பம் வளர, வளர, திறமையான டெவலப்பர்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.
3. சுகாதார பணியாளர்கள்:
சுகாதார பணியாளர்களான நர்ஸ், மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு தேவை அதிகரிக்கும்.வயதான மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள், சிகிச்சை இதற்கு காரணமாக இருக்கும்.

சைபர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள், தங்களது டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாக்க இணைய பாதுகாப்பு வல்லுனர்களை நாடுகின்றன. சைபர் தாக்குதல், தகவல்கள் திருட்டு போன்றவற்றுக்கு எதிராக இணைய பாதுகாப்பு வல்லுனர்கள் அரண்களாக பாதுகாக்க வேண்டும்.
5. நிதி ஆலோசகர்கள் :
தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களது நிதி, முதலீட்டுகளை மேலாண்மை செய்ய நிதி ஆலோசகர்கள் உதவி செய்வர். நிதி சார்ந்த படிப்பறிவு பரவலாகும் நேரத்தில், நிதி ஆலோசகர் பணிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

6. சோலார் எனர்ஜி டெக்னீஷியன் :
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவை அதிகரிக்கும் நிலையில், சோலார் எனர்ஜி டெக்னீஷியன்களுக்கான தேவையும் அதிகரிக்கும். சோலார் பேனல்களை நிறுவுவதல்,
பராமரித்தல், ஆகியவற்றிற்கு பங்களிப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை பெறலாம்.
7. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்:
பெரும்பாலான தொழில்கள், ஆன்லைன் தளங்களுக்கு மாறி வரும் நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். டிஜிட்டல் சந்தையில், பொருட்கள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்க உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!